உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், பயணிகள் ரயில் ஒன்று, சரக்கு ரயில் மீது மோதியது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் இருந்து புறப்பட்ட கலிண்டி எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை இந்த ரயில் உத்தரப்பிரதேசம் மாநிலம், தண்ட்லா ஜங்ஷன் அருகே வந்தபோது, எதிரே சரக்கு ரயில் ஒன்றும் வந்துள்ளது.


ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்களும் நேருக்கு நேர் வந்தது. இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட ரயில் டிரைவர்கள் போராடி, ரயில்களை நிறுத்தினர். 


நள்ளிரவில் நிகழ்ந்த விபத்து காரணமாக, அப்பகுதியில் சில மணிநேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.