அண்ணாமலையின் மிகப்பெரிய சாதனை.. நக்கலடித்த டிகேஎஸ் இளங்கோவன்

அண்ணாமலை காவல்துறை அதிகாரியாக கர்நாடகாவில் பணியாற்ற போது எவ்வளவு குற்றவாளிகளை கைது செய்தார் என்று தெரியவில்லை என டி கே எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Jun 15, 2024, 01:00 PM IST
  • பாஜகவில் இணைத்துதான் அண்ணாமலையின் சாதனை: டிகேஎஸ் இளங்கோவன்.
  • பாஜக சொல்வது போல் நாடு ஒரு நாடாக இல்லை 1947க்கு பிறகு தான் ஒரு நாடாக ஆனது.
அண்ணாமலையின் மிகப்பெரிய சாதனை.. நக்கலடித்த டிகேஎஸ் இளங்கோவன் title=

சென்னை வடக்கு மாவட்டம் ஆர் கே நகர் மேற்கு பகுதி 38வது வார்டு திமுக சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் தலைமையில் பகுதி செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன் முன்னிலையில் நேதாஜி நகரில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கழக செய்தி தொடர்பு தலைவர் டி கே எஸ் இளங்கோவன் சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆர் டி சேகர் எம்எல்ஏ ஜே ஜே எபினேசர் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை இரண்டு பெண்களுக்கு தையல் இயந்திரம் மற்றும் ஆயிரம் பேருக்கு சேலை குக்கர் நான் ஸ்டிக் தவா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

முன்னதாக அதிமுகவிலிருந்து பலர் விலகி சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆர் டி சேகர் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். பின்னர் மேடையில் பேசிய டி கே சி இளங்கோவன் பாஜக சொல்வது போல் நாடு ஒரு நாடாக இல்லை 1947க்கு பிறகு தான் ஒரு நாடாக ஆனது. 

மேலும் படிக்க | விஜய் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப் பயணம் வர போகிறார் - கரூரில் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த அப்டேட்

தமிழ்நாட்டில் பாஜகவை ஏற்றுக்காத காரணம் மனுதர்மம் பேசும் பொழுது நம்மளை பற்றி தவறுதலாக பேசுவார்கள். சேர சோழ பாண்டிய மன்னர்கள் சத்ரியனாகப் பிறந்து மன்னராக வில்லை, வடக்கில் மன்னராக வேண்டும் என்றால் அவன் பிறப்பால் சத்ரியனாக இருக்க வேண்டும். இங்கு வீரனாக திறமைசாலையாக நிர்வாகம் செய்ய தெரிந்தவனாக இருந்தால் மன்னராகலாம். அப்படிப்பட்ட சமுதாயத்தில் பல்வேறு பல்வேறு குழப்பங்களை மதத்தின் பேரால் உருவாக்கி ஏற்றத்தாழ்வுகளை பிறப்பின் அடிப்படையில் உருவாக்கி வைத்திருந்ததை மாற்றி அதற்கான பல திட்டங்களை நீதி கட்சி தொடங்கி செயல்படுத்தி வரும் போது அதை முழுமையாக நிறைவேற்ற துடித்தவர் தலைவர் கலைஞர்.

நான் இந்தியன் நான் இஸ்லாமியன் ஆனா இந்தியன், நான் கிறிஸ்தவன் ஆனா நான் இந்தியன், நான் தெலுங்கு பேசுவேன் ஆனால் இந்தியன், கன்னட பேசுபவன் இந்தியன் என்னவாக இருந்தாலும் நான் இந்தியன் இந்த வேற்றுமை ஒற்றுமை தான் இந்தியாவுக்கு பெருமை அடிப்படையாக இருக்கிறது. உலகமே வியந்து பாராட்டுகின்ற ஒன்றாக இருக்கிறது.

இந்த வேற்றுமை ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்க வந்த கட்சிதான் பாஜக. ஒரே நாடு ஒரே மொழி ஒரே தேர்தல் இது ஒரு நாடு 47 வரை ஒரே நாடு இல்லை சேரர்கள் சோழர்கள் பாண்டியர்கள் வடக்கே மராட்டியர்கள் புத்தர்கள் மகதர்கள் பல மன்னர்கள் இருந்தனர்.

இப்படி இவ்ளோ பேர் இருந்த ஒரு நாட்டில் காங்கிரஸ் பல திட்டங்களை வகுத்தனர். இதையெல்லாம் மாற்றி ஒரு மொழி ஒரு மதம் ஆக்க வேண்டும் என்ற கொடூர எண்ணம் பிடித்த பாஜகவிற்கு மிகச்சிறந்த பாடம் வழங்கியிருக்கிறோம் எனவே தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், அண்ணாமலைக்கும் இந்த மாநிலத்திற்கும் தொடர்பு இல்லை அண்ணாமலை காவல்துறை அதிகாரியாக கர்நாடகாவில் பணியாற்ற போது எவ்வளவு குற்றவாளிகளை கைது செய்தார் என்று தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் பாஜக தலைவராக வந்த பிறகு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு குற்றவாளிகளை பாஜகவில் சேர்த்துக்கொண்டது தெரியும். 

அந்த வகையில் அண்ணாமலையின் மாபெரும் சாதனை என்பது காவல்துறை அதிகாரி பணியை விலகி விட்டு வெளியேறி இங்க வந்து குற்றவாளிகள் எல்லாம் பாஜகவில் இணைத்துதான் அவருடைய சாதனை என்ன அவரால் செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய டிகேஎஸ் இளங்கோவன் தமிழர்கள் சமத்துவ வாழ்க்கை விரும்புகிறவர்கள் தமிழர்கள் அனைவரும் சமம் என்று வாழ்பவர்கள் பல ஊர்களில் இஸ்லாமியர்கள் இந்துக்களும் மாமன் மச்சான் உறவு கொண்டு வந்து அண்ணன் தம்பி உறவு போற்றுபவர்கள் பிரிவினை இல்லாதவர்கள் அந்த பிரிவினை தூண்ட வேண்டும் என நினைத்து பாஜக செய்த சதி முற்றிலுமாக தமிழர்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் என்பது நியமன கிடையாது அண்ணாமலை நியமிக்கிற இடத்தில் இருந்தால் சொல்லலாம் மக்களுடைய விருப்பம் பாஜகவுக்கு எதிராக இருப்பதை இந்த தேர்தல் காண்பிக்கிறது.

தமிழ்நாட்டின் மக்கள் திமுக கூட்டணியை முழுமையாக ஆதரித்திருக்கிறார்கள் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000! யார் விண்ணப்பிக்கலாம்? யாருக்கு கிடைக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News