Farmers March To Delhi: விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 'டெல்லி சலோ' பேரணியைத் தொடங்கினர். விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவாரத்தை தோல்வி அடைந்ததை அடுத்து, சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஜ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளனர். இந்த போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2024 மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் விவசாயிகள் போராட்டம் அனைவரின் கவனத்தை பெற்றுள்ளது. எப்படியாவது விவசாயிகள் போராட்டத்தை தடுக்க வேண்டும் என மத்திய அரசு, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தைக்கு பின் விவசாயிகளின் 10 அம்ச கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று விவசாயிகள் சங்கம் திட்டவட்டமாக தெரிவித்தது.


மேலும் படிக்க - டெல்லியை நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்: இணையம், எஸ்எம்எஸ் சேவைகள் ரத்து


டெல்லி எல்லையில் தடுப்புகள் அமைப்பு


இதனையடுத்து டெல்லியை நோக்கி வரும் விவசாயிகளை தடுத்து நிறுத்த தேசிய தலைநகரம் டெல்லியை சுற்றியுள்ள அனைத்து எல்லைகளிலும் போலீஸ், துணை இராணுவப் படை வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். விவசாயிகளின் வாகனங்கள் டெல்லிக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் தடுப்புக் கம்பிகள், சாலையில் பெரிய பெரிய ஆணிகள், கான்கிரீட் தடுப்புகள், சாலையின் ஓரங்களில் குழிகள், கிரேன்கள் உட்பட தடுப்புகளை பயன்படுத்தி டெல்லி எல்லையில் தடுப்புகள் அமைத்து கடுமையான நடவடிக்கைகளை டெல்லி காவல்துறை மேற்கொண்டு உள்ளது. 


ஹரியானாவில் உள்ள போலீஸ் அதிகாரிகள், அம்பாலா, ஜிந்த், ஃபதேஹாபாத், குருக்ஷேத்ரா மற்றும் சிர்சாவில் பல இடங்களில் பஞ்சாப் மாநிலத்தின் எல்லைகளை கான்கிரீட் தடுப்புகள், இரும்பு ஆணிகள் மற்றும் முட்கம்பிகளைப் பயன்படுத்தி பேரணியை தடுக்கிறார்கள்.


பஞ்சாப் மற்றும் ஹரியானா எல்லையில் பல இடங்களில் கலவர தடுப்பு வாகனங்கள், தண்ணீர் பீரங்கி உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளன. 


'டெல்லி சலோ' பேரணியை தொடங்கிய விவசாயிகள்


பல விவசாயிகள் தங்கள் டிராக்டர் தள்ளுவண்டிகளுடன் காலை 10 மணியளவில் ஃபதேகர் சாஹிப்பில் இருந்து அணிவகுப்பைத் தொடங்கி, ஷம்பு எல்லை வழியாக டெல்லியை நோக்கி நகர்கின்றனர். மற்றொரு குழு சங்ரூரில் உள்ள மெஹல் கலனில் இருந்து கானௌரி எல்லை வழியாக தேசிய தலைநகரை நோக்கி நகர்கிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பஞ்சாபிலிருந்து விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 'டெல்லி சலோ' பேரணியை தொடங்கினர். 


விவசாய சங்கங்களின் கொடிகளை ஏந்தியபடி டிராக்டர் தள்ளுவண்டிகளில், உலர் ரேஷன், மெத்தை, பாத்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் விவசாயிகள் பேரணியைத் தொடங்கினார்.


மேலும் படிக்க - Delhi Chalo: டெல்லியை நோக்கி வரும் விவசாயிகள்... பலத்த பாதுகாப்புடன் தயாராகும் தலைநகர்


15 மாவட்டங்களில் 144 அமல்


ஹரியானா அரசாங்கம் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 144 இன் கீழ் 15 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் ஒன்றாக கூடுவதைத் தடைசெய்துள்ளது மற்றும் டிராக்டர் தள்ளுவண்டிகளுடன் எந்த வகையான போராட்டம் மற்றும் பேரணியை தடை செய்துள்ளது.


மத்திய அரசு எதுவும் செய்யவில்லை.. அதான் பேரணி -விவசாயிகள் சங்கம்


சம்யுக்தா கிசான் மோர்ச்சா (அரசியல் சாராதது) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய அமைப்புகள் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை ஏற்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க டெல்லி நோக்கி செல்வதாக அறிவித்துள்ளனர். 


கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் பொதுச் செயலாளர் சர்வான் சிங் பந்தேர் கூறுகையில், "தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசுடன் முட்டுக்கட்டை போடுவதைக் குறிப்பிடுகையில், தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக புதிய குழுவைத் தாங்கள் விரும்பவில்லை என்றும், எந்தவொரு குழுவும் பிரச்சினையை புரிந்துக்கொள்வதில்லை, அதை பின்னுக்குத் தள்ளும் வகையில் தான் இருக்கிறது" என்றும் கூறினார்.


"நாங்கள் எந்த தடைகளையும் உடைக்க விரும்பவில்லை. எங்கள் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் அவர்கள் (மத்திய அரசு) எதுவும் செய்யவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வோம்? பேரணியை நோக்கி எங்களை கட்டாயப்படுத்தி உள்ளது " என்று ஃபதேகர் சாஹிப் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாந்தர் கூறினார்.


மேலும் படிக்க - தேர்தல் நேரத்தில் தான் காங்கிரசுக்கு விவசாயிகள் நியாபகம் வரும்: பிரதமர் மோடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ