டெல்லி: டெல்லியில் அதிக அளவிற்கு காற்று மாசடைந்துள்ள நிலையில்,  தீபாவளிக்கு பிறகு டில்லியில் காற்றின் தரம் மிகவும் அபாய கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தக் கோரி டெல்லிவாசிகள் போராட்டத்தில் ஏற்பட்டது.  டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் 17 வருடங்களில் இல்லாத அளவுக்கு மோசமான கனரக பனிப்புகை நிலவுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் டெல்லியில் வசிக்கும் அனைவரும் காற்றில் ஏற்பட்டுள்ள மாசைக் கட்டுப்படுத்தக் கோரி டெல்லியில் உள்ள ஜன்தர் மன்தரில் ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தின் போது சுத்தமான காற்றை சுவாசிப்பது தங்கள் உரிமை என்றும், அதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் முழங்களை எழுப்பினார்கள். 


இந்த போராட்டத்தில் நடிகை நபீசா அலி கலந்துக்கொண்டார். மேலும், ஒன்றைப்படை எண் கொண்ட கார்கள் ஒரு நாளும், இரட்டைப்படை எண் கொண்ட கார்கள் ஒரு நாளும் நகரத்திற்குள் இயங்கவும் டெல்லியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை நபீசா அலி கூறியுள்ளார்.


இதற்கிடையில், புகை மூட்டத்தை டில்லியில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை குறித்து ஆலோசிப்பதற்காக முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அவசரமாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி உள்ளார். இந்த கூட்டத்தில், தற்போதைய நிலையை சமாளிப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.