Ola Maps: இனி கூகுள் மேப்ஸ் வேண்டாம்! சொந்த வரைபடத்திற்கு மாறியது ஓலா!

Own Map Of Ola : ஓலா தனது சொந்த ஓலா வரைபடத்தை அறிமுகப்படுத்துகிறது, இனி கூகுள் உதவியுடன் வண்டிகள் இயங்காது, இதனால், நிறுவனத்திற்கு 100 கோடி ரூபாய் மிச்சமாகும்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 7, 2024, 05:13 PM IST
  • கூகுளிடமிருந்து விலகியது ஓலா!
  • பிரத்யேக மேப்ஸ் வரைபடத்தை உருவாக்கிய ஓலா!
  • இனி ஓலா கட்டணம் குறையலாம்!
Ola Maps: இனி கூகுள் மேப்ஸ் வேண்டாம்! சொந்த வரைபடத்திற்கு மாறியது ஓலா! title=

ஓலா கார் சேவை நிறுவனம், இனிமேல், Google வரைபடத்தைப் பயன்படுத்தாது என அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அப்படி என்றால், இனிமேல் வாடகைக்கு கார் எடுக்கும்போது, வரைபட சேவைகள் எப்படி செயல்படும்? அதற்கான முன்னேற்பாடுகளை முடித்துவிட்ட ஓலா, இதுதொடர்பான அறிவிப்பை கடந்த வெள்ளிக்கிழமையன்று, ( 2024 ஜூலை 5) வெளியிட்டது. சொந்த வரைபடத்தை இனிமேல் பயன்படுத்தும் விதமாக, ஓலா கேப்ஸ் அதனை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஓலா மேப்ஸ்

ஓலா நிறுவனம், தனது சொந்த ஓலா வரைபடத்தை அறிமுகப்படுத்துகிறது. அதற்கு ஓலா மேப்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பவிஷ் அகர்வால் இந்த தகவலை சமூக ஊடக தளமான X இல் பதிவிட்டுள்ளார்.

நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி
"கூகுள் மேப்ஸிற்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.100 கோடி செலவழித்து வந்தோம். ஆனால் தற்போது எங்களுடைய சொந்த ஓலா வரைபடத்திற்கு மாறிவிட்டோம். இந்த செலவு இனிமேல் இல்லை!" என்று ஓலாவின் இணை நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். 

சில மாதங்களுக்கு முன்பு, ஓலா தனது கிளவுட் உள்கட்டமைப்பை மைக்ரோசாஃப்ட் அஸூர் (Microsoft Azure) என்பதில் இருந்து மாற்றியது. இப்போது நிறுவனம் அதன் சொந்த சுற்றுச்சூழல் அமைப்பை இயக்கும் வகையிலான அதன் பெரிய மொழி மாதிரி (LLM) செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்தியிருக்கிறது.  

மேலும் படிக்க |  4G ரிசார்ஜ் பிளான்களில் BSNL தான் பெஸ்ட்! புதிய அன்லிமிடெட் ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியல்!

எதிர்காலத்தில் புதிய அம்சங்கள் கிடைக்கும்
பல புதிய அம்சங்கள் ஓலா வரைபடத்தில் வரும் காலத்தில் இணைக்கப்படும் என்றும் பவிஷ் அகர்வால் தெரிவித்தார். ஸ்ட்ரீட் வியூ (Street View) 3D வரைபடங்கள், நியுட்ரியல் ரேடியன்ஸ் ஃபீல்ட்ஸ் (Neural Radiance Fields (NERFs) (NERFகள்), உட்புறப் படங்கள், ட்ரோன் வரைபடங்கள் என பல புதிய அம்சங்கள் சேரும்.

புதிய ஓலா வரைபடத்தை உருவாக்க OpenStreetMap என்ற திறந்த மூல திட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. OpenStreetMap உடன், Ola தனது சொந்த தரவையும் பயன்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேப்ஸ் பயன்பாட்டிற்கு கட்டணம் வசூலிக்கும் கூகுள் 
சாதாரண மக்கள் கூகுள் மேப்ஸை இலவசமாகப் பயன்படுத்தலாம். ஆனால் ஓலா போன்ற நிறுவனங்கள் கூகுள் மேப்ஸின் அப்ளிகேஷன் புரோகிராமிங் இன்டர்ஃபேஸை (ஏபிஐ) பயன்படுத்துகின்றன, அதற்காக அவர்கள் பணம் செலுத்த வேண்டும். ஓலா தனது சொந்த வரைபடத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த கட்டணச் செலவுகள் மிச்சப்படும். ஆனால், ஓலா தனது சொந்த வரைபடங்களை இயக்க சிறிது பணம் செலவழிக்க வேண்டும், ஆனால் அது கூகுளுக்கு செலுத்தும் கட்டணத்தைவிட குறைவானது..

ஓலாவின் சவாரி சேவை மற்றும் மின்சார வாகனங்களுக்கு மட்டும் ஓலா வரைபடங்கள் இருக்காது. உண்மையில், டெவலப்பர்கள் ஓலா வரைபடத்தின் API ஐயும் பயன்படுத்த முடியும். அதாவது பிற ஆப்ஸ் தயாரிக்கும் நிறுவனங்களும் தங்கள் ஆப்ஸில் ஓலா வரைபடத்தைப் பயன்படுத்த முடியும். ஆனால் இதற்காக டெவலப்பர்கள் ஓலாவுக்கு பணம் செலுத்த வேண்டும். ஓலாவின் செயற்கையான கிளவுட் சிஸ்டம் மூலம் இந்தக் கட்டணம் செலுத்தப்படும்.

மேலும் படிக்க | சாம்சங் முதல் நத்திங் வரை... ஜூலை 2வது வாரத்தில் சந்தைக்கு வரும் அசத்தல் போன்கள்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News