Arvind Kejriwal: என்னை பயங்கரவாதி போல் பாஜக நடத்துகிறார்கள் - அரவிந்த் கெஜ்ரிவால்
Arvind Kejriwal Attack Modi Govt: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக அரசு என் மீது போடும் வழக்குகளை பார்த்ததால், நாட்டின் மிகப் பெரிய பயங்கரவாதி போல் என்னை நடத்துகிறார்கள் என மத்திய அரசு மீது கடுமையான குற்றசாட்டுகளை கெஜ்ரிவால் வைத்துள்ளார்
Delhi News In Tamil: டெல்லி துவாரகா செக்டார் 1ல் உள்ள அரசுப் பள்ளிக் கட்டடத்துக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (வியாழக்கிழமை) அடிக்கல் நாட்டினார். அவருடன் டெல்லி அரசின் கல்வி அமைச்சர் அதிஷியும் உடனிருந்தார். அப்பொழுது பேசிய அவர், ஒரு ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் மற்றும் ஒன்பது ஆய்வக கூடங்கள் இருக்கும். இந்த பள்ளியின் மூலம் 2000 குழந்தைகள் பயன் பெறுவார்கள் எனத் தெரிவித்தார். அதோடுமட்டுமில்லாமல் மத்திய அரசையும் கடுமையாக தாக்கி பேசினார் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லியில் பணவீக்கம் குறைவாக இருக்கக் காரணம் என்ன?
டெல்லியில் மின்சாரம் இலவசம். தண்ணீர் இலவசம். டெல்லியில் கல்வி இலவசம். குழந்தைகளுக்காக மூவாயிரம் முதல் நான்காயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டியிருந்தது. ஆனால் அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. டெல்லியில் சிகிச்சை இலவசம். டெல்லி டிடிசி பஸ்சில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். முதியோர்களுக்கு யாத்திரை இலவசம். இதன் காரணமாக நாட்டிலேயே டெல்லியில் பணவீக்கம் குறைவாக உள்ளது என்றார்.
மேலும் படிக்க - சிக்கலில் அரவிந்த் கெஜ்ரிவால்! வரும் 17 ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
யார் திருடன்? கேள்வி எழுப்பிய கெஜ்ரிவால்
மணீஷ் சிசோடியாவை திருடன் என்று பாஜக கூறி வருகிறது. மணீஷ் ஏழைக் குழந்தைகளுக்காக அற்புதமான பள்ளிகளைக் கட்டினார். மணீஷ் ஏழைகளின் குழந்தைகளுக்கு எதிர்காலத்தைக் கொடுத்தார்.
குஜராத் மற்றும் உத்தரபிரதேசத்தில் அரசு பள்ளிகள் மூடப்பட்டு தனியார் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஏழைகளின் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் கட்டுபவன் திருடனா அல்லது பள்ளியை மூடுகிறவன் திருடனா? எனக் கேள்வி எழுப்பினார்.
கடைசி மூச்சு வரை டெல்லி மக்களுக்கு சேவை செய்வேன் -கெஜ்ரிவால்
அவர்கள் வேலையை அபர்கள் செய்யட்டும், நாங்கள் எங்கள் வேலையைச் செய்கிறோம். எனது கடைசி மூச்சு வரை டெல்லி மக்களுக்கு சேவை செய்வேன். என்னுடைய ஒவ்வொரு சொட்டு ரத்தமும், ஒவ்வொரு துளியும் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது என்றார்.
என்னை பயங்கரவாதி போல் பாஜக நடத்துகிறது - அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், "கடந்த காலங்களில் எங்களை தடுக்க பாஜக எத்தனையோ வழக்குகள் போட்டது. சில நேரங்களில் சிபிஐ நோட்டீஸ், சில சமயம் இடி நோட்டீஸ். எனக்கே புரியவில்லை. என்ன தான் நடக்கிறது. நாட்டின் மிகப் பெரிய பயங்கரவாதி நான் தான் என்பது போல, ஒட்டுமொத்த ஏஜென்சியும் காவல்துறையும் என் பின்னாலேயே.. என்னையே குறிவைத்து இருகின்றனர் எனக் கூறினார்.
அனைவரையும் சிறையில் அடைக்க பாஜகவை அனுப்பி உள்ளார் -கெஜ்ரிவால்
கெஜ்ரிவால் மேலும் கூறுகையில், "கடவுள் பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனையும் ஏதோ ஒரு நோக்கத்துடன் அனுப்பியுள்ளார் என்று பகவத்கீதாவில் எழுதப்பட்டு உள்ளது. ஒருவர் பூமியில் பிறந்தால் அவருடைய வாழ்க்கையில் நிச்சயமாக ஏதோ ஒரு நோக்கம் இருக்கும். கடவுள் அவர்களை (பாஜக) அனுப்பியுள்ளார். பொய்யான வழக்குகள் போட்டு, அனைவரையும் சிறையில் அடைத்து, நோட்டீஸ் அனுப்பும் நோக்கத்தில் அவர்களை பூமிக்கு அனுப்பி உள்ளார். ஆனால் என்னை உங்களுக்காக பள்ளி, மின்சாரம், தண்ணீர் வசதிகளை செய்து தருவதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்" என்றார்.
மேலும் படிக்க - ஆம் ஆத்மி கட்சியை ஒழிக்க பிரதமர் மோடி விரும்புகிறார் -அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்
கெஜ்ரிவாலுக்கு 5 முறை சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை
டெல்லி மதுபானக் கொள்கையில் நடந்த ஊழல் தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் (ED) அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
முதல் சம்மன் - நவம்பர் 2, 2023,
இரண்டாவது சம்மன் - டிசம்பர் 21, 2023,
மூன்றாவது சம்மன் - ஜனவரி 3, 2024,
நான்காவது சம்மன் - ஜனவரி 18, 2024,
ஐந்தாவது சம்மன் - பிப்ரவரி 2, 2024.
டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன்
இதனையடுத்து அமலாக்க இயக்குனரகம் சார்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிப்ரவரி 17 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் படிக்க - கைதான 2 அமைச்சர்களும் ராஜினாமா... நெருக்கடியில் ஆம் ஆத்மி அரசு - இனி என்னவாகும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ