டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவலும், ஒமிக்ரான் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்துப்பின் இந்தியாவில் கொரோனா தொற்று 27ஆயிரத்தை எட்டியுள்ளது. அதேசமயம் ஒமிக்ரான் பாதிப்பும் 1500க்கும் மேல் உயர்ந்துவிட்டது.
டெல்லியிலும் (Delhi Omicron cases) கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி டெல்லியில் 2,716 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டனர், இதில் 247 பேருக்கு மருத்துவமனை அனுமதி தேவைப்பட்டது. அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்று நாட்களில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன. எனினும், ஒமிக்ரான் பரவல் அச்சம் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
ALSO READ | 3 மடங்கு ஆபத்தானது Omicron மாறுபாடு: ஆய்வில் வெளிவந்த பகீர் தகவல்
இந்த நிலையில் தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) கொரோனா தொற்றால் (Covid 19) பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது., எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நோய்த்தொற்றின் லேசான அறிகுறிகள் உள்ளன. இதனால் நான் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தயவு செய்து தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களையும் பரிசோதித்துக் கொள்ளுங்கள் என்று ட்வீட் பதிவு செய்துள்ளார்.
முன்னதாக நேற்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்றாலும், பாதிக்கப்படுவோருக்கு லேசான அறிகுறிகள்தான் காணப்படுகின்றன, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதும் குறைவு. ஆதலால், மக்கள் அச்சப்படத் தேவையில்லை.
டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளில் ஒரு சதவீதம் மட்டுமே நோயாளிகள் இருக்கிறாரகள், 99 சதவீதம் காலியாகவே இருக்கின்றன. கடந்த 2-வது அலையோடு ஒப்பிடுகையில் ஒமிக்ரானால் பாதிப்பு குறைவுதான். அதேபோல், டெல்டாவை விட ஒமிக்ரான் தொற்று மிதமானது தான்.
கடந்த டிசம்பரம் 29ம் தேதி 2000 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், ஜனவரி 1ம் தேதி 6 ஆயிரமாக அதிகரி்த்துள்ளது. ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 262லிருந்து 247ஆகக் குறைந்துள்ளது என்று கெஜ்ரிவால் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR