புதுடெல்லி: பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், WFI தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு டெல்லி உள்ளூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இரண்டு நாள் இடைக்கால ஜாமீன் வழங்கியது. கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் ஹர்ஜீத் சிங்,  ரூ.25,000 பிணையின் பெயரில் ஜாமீன் வழங்கினார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) உதவி செயலாளர் வினோத் தோமருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சிங் மற்றும் தோமர் ஆகியோர் தங்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் கோரினார்கள்.



ஆறு முறை எம்.பி.யாக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக ஜூன் 15 ஆம் தேதி டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.


இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) சட்டப்பிரிவு 354 (பெண்ணைத் தாக்குதல் அல்லது கிரிமினல் பலாத்காரம் செய்தல் அல்லது அவரது தன்மானத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் செயல்படுவது), 354A (பாலியல் துன்புறுத்தல்), 354D (பின்தொடர்தல்) மற்றும் 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகியவற்றின் கீழ், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 


WFI உதவி செயலாளர் வினோத்தோமர் மீது, ஐபிசி பிரிவுகள் 109, 354, 354A மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் குற்றங்கள் சுமத்தப்பட்டன.


மேலும் படிக்க | 13 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட டியூசன் மாஸ்டர் கைது


ஊடகங்கள் விஷயத்தை பெரிதுபடுத்தி, திரிப்பதாக, பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் வக்கீல் குற்றம் சாட்டினார், அதற்கு பதிலளித்த நீதிபதி, இதுதொடர்பாக, அவர் உயர் நீதிமன்றம் அல்லது விசாரணை நீதிமன்றத்திற்கு விண்ணப்பத்தை தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்தார். இந்த மனு தொடர்பாக நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்கும் என நீதிபதி கூறினார்.


ஆனால், இது தொடர்பாக பிரிஜ் பூஷணின் வழக்கறிஞர் எந்த விண்ணப்பத்தையும் முன்வைக்கவில்லை. தற்போதைய வழக்கு தவிர, சிங்கிற்கு எதிராக மற்றொரு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, 18 வயது நிரம்பாத இளம் மல்யுத்த வீராங்கனையிடம் பாலியல் சீண்டல் செய்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலான வழக்கு, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்திய ஏழு பெண் வீராங்கனைகளில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த பத்தாண்டுகளில், வெவ்வேறு நேரங்களிலும் இடங்களிலும் பிரிஜ் பூஷன் சரண் சிங் தகாத தொடுதல், தடவுதல், பின்தொடர்தல் மற்றும் மிரட்டல் போன்ற பல பாலியல் துன்புறுத்தல்களை பெண்களுக்கு இழைத்ததாக இரண்டு எஃப்.ஐ.ஆர்.களில் குறிப்பிடப்பட்டுள்ளது.  


மேலும் படிக்க | ‘அந்த இடத்தில் தொட்டுட்டாரு..’ ஷகிலாவிற்கு நேர்ந்த பாலியல் கொடுமை..!


"இறுதிப் போட்டியில் நடுவரின் முடிவால் எனது குழந்தையின் ஒரு வருட கடின உழைப்பு பாழடைந்துவிட்டது என்ற ஆத்திரத்தில் நான் நிரம்பினேன், நான் பழிவாங்க முடிவு செய்தேன்," என்று அவர் கூறினார்.


மைனர் மல்யுத்த வீராங்கனையை பாலியல் சீண்டல் செய்தது உட்பட அனைத்து பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளையும் பிரிஜ் பூஷன் சரண் சிங் கடுமையாக மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) தேர்தல்கள் ஜூன் மாத இறுதிக்குள் நடத்தப்படும் நிலையில், மல்யுத்த வீரர்களின் போராட்டம் அதில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது. மல்யுத்த வீரர்களின் போராட்டத்தால் நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அதோடு, ஐக்கிய உலக மல்யுத்தம் (UWW) இந்தியாவின் மல்யுத்த அமைப்பை இடைநீக்கம் செய்வதாக மே 30 அன்று தெரிவித்ததும் முக்கியத்துவம் பெறுகிறது..


மேலும் படிக்க | ஆணாதிக்கம் வெறுக்கப்பட வேண்டியது: கேரள உயர் நீதிமன்றத்தை கூற வைத்த ரெஹானா ஃபாத்திமா யார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ