நாட்டை உலுக்கிய நிர்பயா கும்பல் மற்றும் கொலை வழக்கின் நான்கு குற்றவாளிகளின் தூக்கு தண்டனை தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூக்கு தண்டனையில் இருந்து தளர்வு கோரி ஜனாதிபரிக்கு கருணை மனு தாக்கல் செய்த குற்றவாளி பவன் குமார் குப்தாவின் மனுவை விசாரித்த டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை மீண்டும் பிறப்பித்துள்ளது.


வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்தர் ராணா விசாரணையின் மேலதிக உத்தரவுகளை தற்போது ஒத்திவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


முன்னதாக, குற்றவாளிகளின் கருணை மனுக்களை தாக்கல் செய்வதில் மிகவும் தாமதமாக செயல்பட்டதற்காக குற்றவாளியின் வழக்கறிஞரை கூடுதல் அமர்வு நீதிபதி கண்டித்தார். முன்னதாக குற்றவாளி பவன் குமாரின் கருணை மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் பவன் மற்றும் அக்‌ஷய் குமார் சிங் ஆகியோரின் மரண உத்தரவுகளைத் தடுத்து நிறுத்துவதற்கான விண்ணப்பங்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


எவ்வாறாயினும், குற்றவாளி பவனின் வழக்கறிஞர் A P சிங், தான் ஒரு கருணை மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும், மரணதண்டனை நிறுத்தப்பட வேண்டும் என்றும் வழக்கின் விசாரணையின் போது குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து நீதிபதி அவரது வழக்கை வாதிடுவதற்கு மதிய உணவுக்குப் பின் வருமாறு கேட்டுக் கொண்டார்.


மதிய உணவுக்குப் பிந்தைய விசாரணையில், குற்றவாளிகளின் வழக்கறிஞர் AP சிங்கை "நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று நீதிமன்றம் கூறி, "யாராலும் ஒரு தவறான நடவடிக்கை எடுக்கப்பட்டது, அதன் விளைவுகள் உங்களுக்குத் தெரியும்" என்று எச்சரித்தது.


குறித்த இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிமன்றம், ​​தீஹார் சிறை அதிகாரிகள், கருணை மனுவை தாக்கல் செய்த பின்னர், பந்து அரசாங்கத்தின் கோர்டில் உள்ளது என்றும், நீதிபதிக்கு இப்போது இதில் எந்தப் பங்கும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.


இதனையடுத்து, குற்றவாளி பவன் குமாரின் கருணை மனுவில் குடியரசுத்தலைவர் சிறைச்சாலையிலிருந்து ஒரு நிலை அறிக்கையை நாடுவார் என்றும் அது நிகழும்போது, மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்றும் நீதிபதில்கள் குறிப்பிட்டுள்ளனர்.