Two AAP Ministers Resigns: டெல்லியை ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சி இக்கட்டான சூழலில் இருந்து வருகிறது. குறிப்பாக, நேற்று முன்தினம் டெல்லி துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா, மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனீஷ் சிசோடியா, டெல்லி முதலமைச்சராக மட்டுமின்றி கல்வி, நிதி, கலால் போன்ற முக்கிய துறைகளின் அமைச்சராகவும் செயல்பட்டார். எனவே, அவரின் கைது ஆம் ஆத்மி கட்சியினரை கொந்தளிப்பில் ஆழ்த்தியது. அவர்கள் தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அவரின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து, மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக சாடி வருகிறார். 


மேலும் படிக்க | இந்தியாவால் துன்புறுத்தப்பட்ட நித்யானந்தா? ஐநா-வில் கைலாசா சொன்னது என்ன?


மனீஷ் சிசோடியாவை போன்று, டெல்லி அமைச்சர்களுக்குள் ஒருவரான சத்யேந்தர் ஜெயினை கடந்தாண்டு மே மாதம், பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்து, சிறையிலடைத்தது. தற்போது அவர் டெல்லி திகார் சிறையில் உள்ளார்.  


ராஜினாமா ஏற்பு 


அவர் சிறையில் இருந்து வந்த நிலையிலும், டெல்லியின் சுகாதாரம் மற்றும் சிறைத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், கைதான சத்யேந்தர் சிங், மனீஷ் சிசோடியா ஆகிய இருவரும் இன்று தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் இருவரின் ராஜினாமாவையும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டார். 


தற்போது, இருவரின் ராஜினாமாவை அடுத்து, ஆம் ஆத்மிக்கு மற்றொரு சோதனை காத்திருக்கிறது எனலாம். கைதான முக்கிய தலைவர்கள் இருவருக்கும், நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் சிறை தண்டனை கொடுக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இது டெல்லியை ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மிக்கு கூடுதல் அழுத்ததை அளிக்கலாம். தற்போது, டெல்லி உள்ளாட்சி ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியிருந்த நிலையில், எதிர்கட்சியான பாஜக தரப்பில் கடும் நெருக்கடி உருவாகலாம் என கூறப்படுகிறது.  



டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவின் துறைகள், டெல்லி அமைச்சர்களாக உள்ள கைலாஷ் கெஹ்லோட் மற்றும் ராஜ் குமார் ஆனந்த் ஆகியோருக்கு வழங்கப்படலாம். புதிய அமைச்சர்கள் யாரும் பதவியேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும் படிக்க | PM-Kisan: வங்கி கணக்கில் ரூ.2000 வந்துவிட்டதா? இல்லையென்றால் உடனே இத பண்ணுங்க!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ