PM-Kisan: வங்கி கணக்கில் ரூ.2000 வந்துவிட்டதா? இல்லையென்றால் உடனே இத பண்ணுங்க!

PM-Kisan: பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் அடுத்த தவணையை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை வழங்குகிறார்.   

Written by - RK Spark | Last Updated : Feb 28, 2023, 07:20 AM IST
  • இதுவரை விவசாயிகளுக்கு 12 தவணைகள் பணம் வழங்கப்பட்டுவிட்டது.
  • கர்நாடக பெலகாவியில் தகுதியான விவசாயிகளின் கணக்கில் ரூ.16,800 கோடி கிடைக்கப்போகிறது.
  • https://pmkisan.gov.in/ எனும் வலைத்தள பக்கத்தில் 13வது தவணை நிலையை சரிபார்க்கலாம்.
PM-Kisan: வங்கி கணக்கில் ரூ.2000 வந்துவிட்டதா? இல்லையென்றால் உடனே இத பண்ணுங்க!  title=

விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கி வருகிறார்.  இதுவரை விவசாயிகளுக்கு 12 தவணைகள் பணம் வழங்கப்பட்டுவிட்டது, விவசாயிகள் அனைவரும் 13வது தவணையை பெற காத்துகொண்டு இருக்கின்றனர்.   தற்போது 8 கோடி பயனாளிகளின் நீண்ட காத்திருப்புக்கு முடிவு கட்டும் வகையில், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் அடுத்த தவணையை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை வழங்குகிறார்.  இதன் மூலம் கர்நாடக பெலகாவியில் தகுதியான விவசாயிகளின் கணக்கில் ரூ.16,800 கோடி ரொக்கம் வரவு வைக்கப்படும்.

மேலும் படிக்க | மார்ச் 1, 2023 முதல் பல விதிகளில் மாற்றம்: சாமானியர்களுக்கு நேரடி தாக்கம்

PM-கிசான் 13வது தவணையை சரிபார்ப்பது எப்படி?

- https://pmkisan.gov.in/ எனும் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

- இப்போது முகப்புப்பக்கத்தில் 'ஃபார்மர்ஸ் கார்னர் செக்ஷன்' என்பதை தேட வேண்டும்.

- இப்போது பெனிஃபிஷியரி ஸ்டேட்டஸ் என்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, அதில் அவர்களின் விண்ணப்ப நிலையை சரிபார்க்கலாம்.  அந்தப் பட்டியலில் விவசாயியின் பெயர் மற்றும் அவரது வங்கிக் கணக்கிற்குத் அனுப்பப்பட்ட தொகை பற்றிய தகவல்கள் இருக்கும்.

- இப்போது ஆதார் எண் அல்லது கணக்கு எண் அல்லது மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.

- அதன் பின்னர் 'கெட் டேட்டா' என்கிற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

பிஎம் கிசான் பயனாளிகளின் பட்டியலை சரிபார்ப்பது எப்படி?

- ஃபார்மர்ஸ் கார்னர் என்கிற பகுதிக்கு செல்ல வேண்டும் 

- அதில் பெனிஃபிஷியரி லிஸ்ட் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

- இப்போது உங்கள் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

- இப்போது அறிக்கையைப் பெறு என்பதை டேப் செய்து அறிக்கையை பெற்றுக்கொள்ளலாம்.

பிஎம் கிசான் பண நிலையைச் சரிபார்ப்பது எப்படி?

மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவி அளிக்கக்கூடிய ஒரு மத்திய துறை திட்டம் தான் பிஎம் கிசான் திட்டம். மாநில அரசும் யூடி நிர்வாகமும் இந்த திட்டத்திற்கு தகுதியான விவசாயி குடும்பங்களை அடையாளம் காணும்.  ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் தலா ரூ.2,000 வீதம் மூன்று சம தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 என விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | Adani Group: பங்குச்சந்தையில் 1 ரூபாய் சம்பாதிக்க எவ்வளவு முதலீடு? அதானி பங்குவிலை சரியானதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News