இந்தியா முழுவதும் கொரோனாவின் 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா தொற்று பெருத்த பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, அதைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கை மேலும் ஒருவாரம் நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலைநகர் டெல்லியில் (Delhi) உள்ள மருத்துவமனைகளில் கொரோனா (Coronavirus) நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. அதேசமயம் ஆக்சிஜன் பற்றாக்குறை, மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் சுகாதாரத்துறை கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது.


இந்நிலையில், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) பிறப்பித்து உள்ளார். 


 



 


ALSO READ | 'Lockdown Package'-களை வழங்கி கொரோனா காலத்தில் மக்களை ஈர்க்கும் சென்னை சொகுசு ஓட்டல்கள்


வழிகாட்டுதல்கள் மாறவில்லை
'ஊரடங்கை அதிகரிக்க அனைத்து தரப்பிலிருந்தும் அறிவுறுத்தல் வெளியானது. ஒரு வகையில், கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான கடைசி ஆயுதம் இதுதான். எனவே, டெல்லியில் ஊரடங்கு அடுத்த திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை நீட்டிக்கப்படம் என்று டெல்லி முதல்வர் அனைத்து தரப்பிலிருந்து கூறியுள்ளார்.


இதற்கிடையில் டெல்லியில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக தொடர்ந்து அரசுக்கு கடிதம் அனுப்புகின்றன. இதனால், ஆக்சிஜன் உபரியாக உள்ள மாநிலங்கள், டெல்லிக்கு அனுப்பி உதவி செய்யும்படி முதல்வர் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR