நிர்பயா வழக்கில் தன்னை சிறார் சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும் என பவன்குப்தா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, விஜய் குமார் சர்மா மற்றும் அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1 ஆம் தேதி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.


நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குக் கயிறு தயாராகிவிட்ட நிலையில், அவர்களில் ஒருவனான பவன் குப்தா, குற்றம் நடந்த போது சிறுவனாக இருந்தேன் என கூறிய மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து இன்று மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளான். தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று குற்றவாளிகளான அக்ஷய் தாக்கூர் மற்றும் வினய் சர்மாவின் சார்பில் நேற்று தாக்கலான மனு டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி ஏ.கே.ஜெயின் இன்று பிற்பகல் தீர்ப்பளிக்க உள்ளார். இந்த நிலையில் புதிய திருப்பமாக பவன் குப்தாவின் மறுசீராய்வு மனு தாக்கலாகி உள்ளது. 



நான்கு பேரில் பவன் குமார் தவிர இதர 3 குற்றவாளிகளுக்கும் கருணைமனு நிராகரிப்பு உள்ளிட்ட அனைத்து சட்ட ரீதியான நிவாரணங்களும் முடிவடைந்துள்ளன. கருணைமனு நிராகரிக்கப்பட்டு 14 நாட்கள் கழித்தே தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டல் இருப்பதால், பவன்குமாரின் கருணை மனுவை தாமதமாக தாக்கல் செய்து தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிப்போட குற்றவாளிகள் தரப்பு முயல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பவன் குமாரின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.