நாட்டிற்கு மிகவும் அவசியமான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் சிவில் சட்டம், கிரிமினல் சட்டம் என இரண்டு வகையான சட்டங்கள் உள்ளன.  கிரிமினல் சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்றாலும், சிவில் சட்டம் பொதுவானது இல்லை.


பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) அமல்படுத்தப்பட்டால்,  இந்திய குடிமகன்கள் எல்லோருக்கும் திருமணம், சொத்து, விவாகரத்துஉள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் ஒரேவிதமான சட்டம் இருக்கும். இப்போது,  பின்பற்றப்படும்  மதம் சார்ந்த சட்டங்கள் செல்லுபடியாகாது. 


இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் (Indian Constitution) 44-வது பிரிவு பொது சிவில் சட்டத்தை பரிந்துரைக்கிறது என்பதோடு, பாஜக தனது தேர்தல் வாக்குறுதியிலும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என கூறியிருந்தது.


இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு தில்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பிரதிபா எம். சிங் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.


விசாரணையின்போது, “நவீன இந்திய சமூகம்  சிறிது சிறிதாக மாறி வருகிறது. மதம், சமூகம் மற்றும் சாதியின் பாரம்பரிய தடைகளை களைந்து, ஒரே விதமாக முன்னேறி வருகிறது. மாறிவரும் இந்த கால சூழ்நிலைகளை பார்க்கும்போது, நாட்டில், ஒரு பொதுவான சிவில் சட்டம் தேவை என்பதை உணர்த்துகிறது” என நீதிபதி குறிப்பிட்டார்.


”நாட்டில் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் இருக்கவேண்டியது மிகவும் அவசியம் என நான் கருதுகிறேன். இதை அமல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்” என நீதிபதி குறிப்பிட்டார்.


மத்திய பாஜக அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முடிவில் உள்ள நிலையில், பொது சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரும் மழைக்கால கூட்டத் தொடரிலேயே இது நிறைவேற்றப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்


ALSO READ | மக்கள் தொகை கட்டுப்பாடு; உத்திர பிரதேச முதல்வர் விரைவில் முக்கிய அறிவிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR