புதுடெல்லி: தீஸ் அசாரி நீதிமன்றத்தில் (Tis Hazari Court) டெல்லி வழக்கறிஞர்களுக்கும் (Delhi Advocates) டெல்லி காவல்துறையினருக்கும் (Delhi Police) ஏற்பட்ட மோதல், இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போது நடைபெற்று வரும் சம்பவங்களை வைத்து பார்த்தால், வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையிலான தகராறு முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. செவ்வாய்க்கிழமையான நேற்று காவல்துறையினர் நடத்திய போராட்டங்களுக்குப் பிறகு, வக்கீல்கள் ரோகிணி (Rohini) மற்றும் சாகேத் (Saket) நீதிமன்றங்களுக்கு வெளியே போலீசாருக்கு எதிராக கோசங்களை எழுப்பி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த சமயத்தில், ரோகிணி நீதிமன்றத்தில் (Rohini Court) ஒரு வழக்கறிஞர் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தவிர, சாகேத் நீதிமன்ற (District Court Saket) வளாகத்தின் கதவுகளை உள்ளே இருந்துப்படி பூட்டிபோட்டு வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் நீதிமன்றத்துக்குள் மக்களை யாரையும் அனுமதிக்கவில்லை.


மறுபுறம், காவல்துறையினரின் நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வருண் தாக்கூர் தில்லி போலீஸ் கமிஷனருக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 


உண்மையில், திஸ் ஹசாரி நீதிமன்றத்தின் சம்பவத்தை எதிர்த்து டெல்லி மாவட்ட நீதிமன்றங்களின் வழக்கறிஞர் இன்று (புதன்கிழமை) நீதிப் பணிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். "டெல்லியின் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் வேலை நிறுத்த போராட்டம் தொடரும்" என்று டெல்லி மாவட்ட நீதிமன்ற ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் (Delhi Lawyers) மற்றும் போலீஸ்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை தில்லி உயர் நீதிமன்றம் (Delhi High Court) இன்று விசாரிக்க உள்ளது. இந்த மனுவை டெல்லி காவல் துறை சார்பில் நவம்பர் 2 ஆம் தேதி (November 2) தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு பிற்பகல் 3 மணியளவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது. டெல்லி காவல்துறையினர் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை தாங்களாகவே நிறைவேற்ற முடியாது என்பதால், இந்த மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


சனிக்கிழமையன்று, தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவது குறித்து ஒரு வழக்கறிஞருக்கும் சில போலீஸ்காரர்களுக்கும் இடையே ஒரு சிறிய விவாதம் நடைபெற்றது. அதன் பின்னர் அது வன்முறையாக மாறியது. அந்த வன்முறை சம்பவத்தில் ஒரு வழக்கறிஞரும் சுடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.