கொலை குற்றவாளியின் ’மாஸ்’ ப்ளான் - போலீஸின் ’மாஸ்டர்’ பிளான்! ஜெயித்தது யார்?
டெல்லியில் ஜெயிலுக்கு போகாமல் இருக்க கொலைக் குற்றவாளி போட்ட மாஸ் ப்ளானை, போலீசார் மாஸ்டர் பிளான் போட்டு கண்டுபிடித்துள்ளனர்.
டெல்லி காஷியாபாத்தைச் சேர்ந்த சுதேஷ் குமார், 13 வயது மகளை 2018 ஆம் ஆண்டு கொலை செய்த குற்றத்திற்காக தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மே மாதம் கொரோனா காரணமாக ஜாமீனில் வெளியே வந்த அவர், மீண்டும் ஜெயிலுக்கு போகாமல் இருக்க மாஸ் பிளான் ஒன்றை போட்டுள்ளார். அதன்படி, தன் வீட்டு ஆல்ட்ரேஷன் வேலை இருப்பதாககூறி, அவருடைய உயரம் கொண்ட டோமன் ரவிதாஸ் என்பவரை வேலைக்கு அழைத்து வந்துள்ளார்.
ALSO READ | முதலில் விபத்து, பின் செயின் பறிப்பு: மர்ம நபர்களால் திருப்பத்தூரில் பரபரப்பு
இரண்டு நாள் வேலைக்கு வந்த ரவிதாஸூடன் நெருங்கிப் பழகிய சுதேஷ், அவருக்கு போதுமான அளவிற்கு மது வாங்கிக் கொடுத்துள்ளார். அப்போது, அளவுக்கு அதிகமாக குடித்ததால் மயங்கிய ரவிதாஸை ஏற்கனவே திட்டமிட்டப்படி முகத்தை சிதைத்து நெருப்பில் கருக்கி சுதேஷ் கொலை செய்துள்ளார். மேலும், தன்னுடைய உடையையும் அவருக்கு அணிவித்து, அதில் தன்னுடைய ஆதார் கார்டையும் வைத்து, உடலை லோனி பகுதியில் வீசியுள்ளார். அங்கிருந்த உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், அதில் இருந்த ஆதார் கார்டு அடிப்படையில் சுதேஷின் மனைவியை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அவரும், உடலைப் பார்த்து தன்னுடைய கணவர் தான் என ஒப்புக்கொண்டார்.
ALSO READ | சத்தமா பாட்டு கேட்டது குத்தமா? பக்கத்து வீட்டுக்காரரின் வெறிச்செயல்!
இருப்பினும், சுதேஷின் மனைவி கொடுத்த வாக்குமூலத்தில் சந்தேகமடைந்த காவல்துறையினர் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சுதேஷின் ஹிஸ்டிரியையும் டிராக் செய்துள்ளனர். அதில் சுதேஷூக்கு பெயில் முடிவடைய இருப்பதை பார்த்த காவல்துறையினருக்கு, சந்தேகம் வலுத்தது. தொடர் விசாரணையில் இறந்தது சுதேஷ் இல்லை என்பதை கண்டறிந்தனர். இதற்கிடையே, ரவிதாஸின் குடும்ப உறுப்பினர்கள் நேரில் வந்து, ரவிதாஸின் அடையாளத்தையும் உறுதி செய்தனர். இதனையடுத்து, கொலை வழக்கு குற்றவாளி சுதேஷ் மற்றும் குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்த மனைவி அனுப்பம்மா இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கொலை குற்றத்தில் இருத்து தப்பிக்க மற்றொரு கொலையை, தம்பதி அரங்கேற்றியது காவல்துறையினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR