டெல்லியில் குடியிருப்பு பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்த கடைகள், வணிக நிறுவனங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கூடுதல் கட்டணம் செலுத்தி வணிக அனுமதி உரிமையை பெற்றுக்கொள்ள வேண்டும் என டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் கெடு விதித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த காலக்கெடு ஜனவரி 7-ம் தேதி முடிவடைந்த நிலையில், அனுமதி உரிமம் பெறாத கடைகளை அதிகாரிகள் சீல் வைத்தனர். 


இந்நிலையில் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்கள் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி முதல் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர்.


அதன்படி கான் மார்கெட், கரோல் பாக் மற்றும் லாஜ்பாத் நகர், விகாஸ்புரி, போசங்கிபூர், விகாஸ்நகர் என பல பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.


இந்த நிலையில் 2 நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு பிறகு இன்று டெல்லியில் அனைத்து கடைகளும் திறக்கப்பட உள்ளது.


மேலும் இந்த சீலிங் காரணமாக ஏற்பட்ட வர்த்தகர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அனைத்து இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பின் பொது செயலாளர் பிரவீன் காண்டெல்வால், 12-புள்ளி சாசனத்தை யூனியன் நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்தீப் பூரிக்கு அனுப்பி வைத்தார்.