பிக்பாஸில் இருந்து அவரை தூக்குங்கள் - மத்திய அமைச்சருக்கு மகளிர் ஆணையம் கோரிக்கை
பிரபல பிக்பாஸ் தொடரில் இருந்து பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான திரைப்பட பிரபலத்தை வெளியேற்ற உத்தரவிடுமாறு, மத்திய அமைச்சருக்கு மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், சல்மான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக சென்றுள்ள இயக்குநர் சஜித் கானை, நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தி மொழியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 16ஆவது சீசன் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் பிரபல இந்தி இயக்குநர் சஜித் கானும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். MeeToo இயக்கத்தின்போது, பல்வேறு பெண்கள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.
மேலும் படிக்க | Bigg Boss போட்டியாளர்கள் இவர்கள் தான்! ஒரே வீட்டில் குடியிருக்கப் போகும் பிரபலங்கள்
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டுமே் என டெல்லி பெண்கள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தையும், பெண்கள் ஆணைய தலைவர் சுவாதி மல்லிவால் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அவரின் பதிவில்,"MeToo இயக்கத்தின்போது, 10 பெண்கள் தங்களுக்கு சஜித் கான் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் அளித்தனர். அந்த புகார்களும், சஜித் கானின் அருவறுக்கத்தக்க மனநிலையைதான் காட்டுகிறது. அப்படிப்பட்டவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார், இது மிகவும் தவறானது. இதனால், அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு கடிதம் எழுதியுள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த தொடர் பாலியல் குற்றச்சாட்டுகளை அடுத்து, இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குநர்கள் சங்கம் (IFTDA) 2018ஆம் ஆண்டில், ஓராண்டு சஸ்பெண்ட் செய்தது. புகழ்பெற்ற 'ஹவுஸ்ஃபுல் 4' என்ற இந்தி திரைப்படத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து விலகுவதாக 2018ஆம் ஆண்டில் அவர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பிக்பாஸில் கலந்துகொள்ளும் புது முகங்கள்: இதோ விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ