பிக் பாஸில் கலந்துகொள்ளும் புது முகங்கள்: இதோ விவரம்

லாஸ்லியாவை போல ஒரு இலங்கை ஆங்கர், மலேசியாவை சேர்ந்த போட்டியாளர் என பல புது முகங்கள் இந்த பிக்பாஸ் போட்டியில் பங்கேற்க உள்ளன.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 7, 2022, 10:22 AM IST
  • புது முகங்கள் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளகின்றனர்
  • களமிறக்கப்படும் பிரபல யூடியூபர்
  • விஜய் டிவி பிரபலங்கள் இரண்டு பேர்
பிக் பாஸில் கலந்துகொள்ளும் புது முகங்கள்: இதோ விவரம் title=

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. கடந்த சீசன்களைவிட இந்தமுறை அதிக போட்டியாளர்களை களமிறக்கும் பிக்பாஸ், ஒவ்வொரு துறையில் இருந்தும் ஸ்டாராக இருப்பவர்களை அலசி ஆராய்ந்து தூக்கியுள்ளது. குறிப்பாக, சமூகவலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்கள் இந்த முறை பிக்பாஸ் வீட்டில் களமிறக்கப்பட இருப்பதால், பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கன்டென்டுக்கும், ரணகளத்துக்கும் பஞ்சமிருக்காது என்பதால் அவர்களை பிக்பாஸ் டீம் குறிவைத்து தூக்கியதற்கு மிக முக்கிய காரணம். இந்நிலையில் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள பிக்பாஸ் ரசிகர்களும் ஆர்வமாக இருக்கின்றனர். வழக்கம்போல் விஜய் டிவி பிரபலங்கள் இரண்டு பேர், அந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளனர். அதுபோக, யூடியூப் பிரபலம், நியூஸ் ரீடர் ஒருவர், டான்ஸ் மாஸ்டர், வெள்ளித்திரையை சேர்ந்த ஒருவர், மாடலிங்கில் இருக்கும் இரண்டு பேர் என மொத்தம் 21 பேர் இந்த முறை களமிறக்கப்பட இருக்கின்றனர்.

மேலும் படிக்க | பிக்பாஸ் தமிழ் போட்டியாளராகும் பிரபல நடிகையின் தம்பி; பறவை பெயர் கொண்ட விஜய் டிவி பிரபலம்

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்த ரக்ஷிதா, நடிகை மைனா, டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ஜிபி முத்து, சூப்பர் மாடல் ஷெரீனா, மெட்டி ஒலி சாந்தி, நடன இயக்குநர் மணிகண்டன், விஜே கதிரவன், நடிகை விஷித்ரா ஆகியோரின் பெயர்கள் டாப் லிஸ்டில் அடிபடுகிறது. 

இதற்கிடையில் இந்த போட்டியில் பொதுமக்களில் இருந்தும் சிலர் கலந்து கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களும் கலந்து கொள்ளலாம் என்று பிக் பாஸ் குழு அறிவித்த உடனே எக்கச்சக்கமான பேர் விண்ணப்பித்திருந்தார்கள். அதிலிருந்து சிலரை பிக் பாஸ் குழு பரிசீலனை செய்து தேர்வாக இருக்கிறது. 

இந்த நிலையில் ஷெரினா என்பவர் இதில் பங்கேற்க உள்ளதா கூறப்படுகிறது. இவர் சென்னையைச் சேர்ந்தவர். இவர் ஒரு சூப்பர் மாடல் ஆவார். அதேபோல் ஜனனி இவர் வெளிநாடு வாழ் தமிழர். இலங்கையில் இருந்து வருகிறார். இவர் அங்கு லாஸ்லியா போல் ஆங்கர் ஆக பணிபுரிந்து இருக்கிறார். அடுத்ததாக ஏ.டி.கே இவர் மலேசியாவை சேர்ந்தவர். இப்படி பல புது முகங்கள் இந்த முறை பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். வெளிநாட்டில் விஜய் டிவியை பார்ப்பவர்களுக்காக வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை தவறாமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் விஜய் டிவி களமிறக்கி வருகிறது. அந்த ஃபார்முலாபடி தான் இந்தமுறையும் இலங்கை, சிங்கப்பூர் போட்டியாளர்கள் களமிறக்கப்படுகின்றனர். இன்னும் சிலரின் பெயர்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 

மேலும் படிக்க | Salman Khan: பிக்பாஸ் ஷோவுக்கு ரூ.1000 கோடி சம்பளமா? சும்மா கிளப்பிவிடாதீங்கய்யா - சல்மான்கான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News