பட்டான்கோட் தாக்குதலில் உயிரிழந்த வீரரின் குடியிருப்பு இடிப்பு!!
பஞ்சாப் மாநிலம் பட்டான்கோட் தாக்குதலில் உயிரிழந்த வீரரின் குடியிருப்பு, ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டதாக கூறி பெங்களுரு மாநகராட்சி அதிகாரிகள் கட்டிடத்தை இடித்து அகற்றியதால் பரபரப்பு எற்பட்டது.
பட்டான்கோட் தாக்குதலில் உயிரிழந்த கமாண்டோ வீரர் நிரஞ்சன் குமாரின் குடியிருப்பு கர்நாடக மாநிலத்தில் பெங்களுரு மாகன்கரா பளியாக் பகுதியில் உள்ளது. இந்நிலையில், அந்த இடம் நீர் ஆக்ரமிப்பு பகுதியில் உள்ளதாக கூறி மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் அந்த கட்டிடத்தை அதிரடியாக அகற்றினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாங்களாகவே ஆக்கிரமிப்பு பகுதியை அகற்றுவதாக உறுதி கூறிய நிலையில் மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை தங்களுக்கு வேதனை அளிப்பதா இருக்கிறது என்று நிரஞ்சன் குமாரின் தந்தை சிவராஜன் குறிப்பிட்டார்.
இதுக்குறித்து மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா கேட்டப்போது:- பாதிக்கப்பட்ட நிரஞ்சன்குமார் குடும்பத்தினருக்கு வேறு பகுதியில் மாற்று இடம் வழங்கப்படும் என்று கூறினார். மேலும் குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலுடன் தான் குடியிருப்பு இடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.