நாளை முதல் பழைய நோட்டுகள் ரூ. 2,000 மட்டுமே மாற்ற முடியும்!
ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளை பெற அறிவுறுத்தப்பட்டது. இதனால் மக்கள் வங்கிகளில் அலை மோதினர். நீண்ட வரிசையில் நின்று தங்கள் ரூபாய் நோட்டுகளை மாற்றி செல்கின்றனர். ஒரே நபர் மீண்டும் மீண்டும் வருவதால்தான் வங்கிகளில் நீண்ட வரிசை ஏற்படுகிறது. இதனை தடுக்கு விதமாக மத்திய அதிகாரி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இந்த நிலையில் இன்று பொருளாதார செயலர் சக்திகாந்த தாஸ் முக்கிய அறிவிப்பு பற்றி அவர் கூறியாதாவது:-
நாளை முதல் வங்கியில் பழைய நோட்டுக்கு ரூ.4500லிருந்து ரூ. 2 ஆயிரம் மட்டுமே மாற்ற முடியும்.
வங்கியில் கூட்டத்தை குறைக்கவே பணம் மாற்றுவது குறைக்கபடுகிறது.
விளைபொருட்களை விற்கும் போது காசோலை மூலம் பணம் பெறலாம்.
விவசாயிகள் பயிர் காப்பீடு செலுத்த 15 நாள் கூடுதல் அவகாசம்.
விவசாயிகள் ஒரு வாரத்தில் ரூ.25 ஆயிரம் வரை எடுக்கலாம்.
பதிவு செய்த வர்த்தகர்கள் வாரம் ரூ.50 ஆயிரம் வரை எடுக்கலாம்.
வேளாண் சந்தை கமிட்டியில் பதிவு செய்தவர்கள் ரூ.50 ஆயிரம் வரை எடுக்கலாம்.
திருமணத்திற்கு வங்கி கணக்கில் இருந்து ரூ.2.5 லட்சம் வரை எடுக்கலாம். திருமணம் நடத்தும் தாய் மற்றும் தந்தை கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் எடுக்கலாம்.
திருமணத்திற்கு பணம் எடுக்க தேவையான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.
மத்திய அரசின் குரூப் சி ஊழியர்கள் ரூ. 10 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம்.
மக்களுக்கு தேவையான பணம் அச்சடிக்கும் பணி இரவு பகலாக நடைபெறுகிறது.
மக்கள் பீதியடைய தேவையில்லை, அரசிடம் தேவையான பணம் உள்ளது எனக்கூறினார்.