டெங்குவை தடுக்க பள்ளி சிறுவன் கண்டுபிடித்த படம்பிடிக்கும் `ட்ரோனை`
மேற்கு வங்கத்தில் உள்ள மாநகராட்சியில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிய பள்ளி சிறுவன் கண்டுபிடித்துள்ள படம்பிடிக்கும் ``ட்ரோனை`` பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
]மேற்கு வங்கத்தில் உள்ள மாநகராட்சியில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிய பள்ளி சிறுவன் கண்டுபிடித்துள்ள படம்பிடிக்கும் ''ட்ரோனை'' பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
டெங்கு காய்ச்சல் கடந்தாண்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமானோர் உயிரிழந்தனர். சுற்றுப்புற சுகாதாரமின்மையே டெங்கு பரவ காரணமாக அமைந்தது. பகலில் கடிக்கும் கொசுக்களினால் இந்தக் காய்ச்சல் ஏற்பட்டது.
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்தாண்டு டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தது. இதையடுத்து தற்போது அம்மாநிலத்தில் உள்ள சிலிகுரி மாநகராட்சியில் கொசுக்களால் பாதிப்பு ஏற்பட்ட பகுதியில், பள்ளி மாணவன் உருவாக்கிய ட்ரோனை கொண்டு ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். உயரமான கட்டடங்களின் மேல் இந்த ட்ரோனை பறக்கவிட்டு அப்பகுதிகள் ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி மேயர் கூறுகையில், ஒரு மாதம் சோதனை முறையில் இதை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த ட்ரோனை உருவாக்கிய பள்ளி மாணவன் சிலிகுரி பகுதியில் டெங்கு பெரிய பிரச்னையாக இருந்தது. உயர்ந்த கட்டடங்களின் மீது தேங்கி நிற்கும் நீர் மற்றும் கொசுக்களை உற்பத்தி செய்யும் லார்வாக்களை கண்டறிவது கடினமாக இருந்தது. ஆனால் இந்த ட்ரோன் மூலம் அது எளிமையாகிவிடும். இந்த ட்ரோனை வானில் பறக்கவிடும்போது அது கொசுக்கள் உற்பத்தியாகும் இடத்தை படம்பிடித்து காட்டும் என்றான். இதனால் எவ்வளவு பயனுள்ளது என்பதை பார்ப்போம் எனக் கூறினார்.