கொரோனாவின் தாக்கத்தின் விளைவுகளை மட்டுப்படுத்தும் நோக்கில் பல கட்டுப்பாடுகள் கடந்த ஆண்டு முதல் தொடர்கிறது. அதில் ஒன்று முகக்கவசம் அணிவது. இன்று சுகாதார சேவைகள் இயக்குநரகம் (Directorate general of health services) வழங்கிய புதிய கோவிட் -19 வழிகாட்டுதல்களின்படி, 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் (Union ministry of health and family welfare) கீழ் இயங்கும் சுகாதார சேவைகள் இயக்குநரகம் (DGHS), கொரோனா தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அவ்வப்போது வெளியிட்டுள்ளது.


அதன்படி, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவது தேவையில்லை. ஆறு முதல் 11 வயது வரையிலான குழந்தைகள் முகக்கவசம் அணியலாம், ஆனால் பெற்றோர் மற்றும் மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் தேவைப்படும்போது மட்டும் அணிந்தால் போதுமானது. இந்தத் தகவலை, ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.



சுகாதார சேவைகள் இயக்குநரகம் (DGHS), அண்மையில் வெளியிட்டுள்ள பரிந்துரைகளில் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தொடர்பான கொரோனா வைரஸ் வழிகாட்டு நெறிமுறைகளில்  குறிப்பிடப்பட்டுள்ளன.


தேவையின் அடிப்படையில், மிகவும் அவசியம் என்றால் மட்டுமே 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் ஆன்டிவைரல் மருந்தைப் பயன்படுத்தலாம், அதேபோல, சி.டி ஸ்கேனும் மிக அவசியம் என்றால் மட்டுமே , எடுக்க வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளில்  குறிப்பிடப்பட்டுள்ளன.


Also Read | Rare Gold Coin: ஒரு தங்க நாணயத்தின் விலை 138 கோடி ரூபாயா? Too much!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR