Best Chief Ministers Across India: மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் தினந்தோறும் புது புது விஷயங்கள் டிரெண்டாகி வருகிறது. தேர்தல் குறித்த கணிப்புகள், கூட்டணி குறித்த கணிப்புகள், தலைவர்கள் குறித்த கணிப்புகள் என தொடர்ந்து பல ஆய்வுகள் வெளிவந்த வண்ணமே உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், இந்தியா டுடே ஊடகத்தால் நடத்தப்பட்ட Mood Of The Nation என்ற ஆய்வில் இந்தியா முழுவதும் உள்ள முதலமைச்சர்கள் குறித்து கருத்துக்கள் கோரப்பட்டன. குறிப்பாக, நாடு முழுவதும் மிகவும் பிரபலமான மாநில முதல்வர்கள் யார் யார், சொந்த மாநிலங்களிலேயே மிகவும் பிரபலமான முதல்வர்கள் யார் யார் உள்ளிட்டவை குறித்து மக்களிடம் கேள்வியெழுப்பி, அவர்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. 


பிரபலமான டாப் 10 முதல்வர்கள்


நாடு முழுவதும் உள்ள 30 மாநில முதலமைச்சர்களில் மிகவும் பிரபலமானவர்களின் பட்டியலில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முதலிடம் பிடித்துள்ளார். இதே ஆய்வு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற போது 43% வாக்குகளை பெற்ற யோகி ஆதித்யநாத் இம்முறை 46.3% வாக்குகளை பெற்றுள்ளார். இதன்மூலம், அவரின் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டு வருவதையும் பார்க்க முடிகிறது என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Gyanvapi: மதுரா & வாரணாசி மசூதிகளுக்கு உரிமை கொண்டாட வேண்டாம்! கோரிக்கையால் வந்த வினை!


இதற்கடுத்த நிலையில், அதாவது 2ஆவது இடத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். அவர் 19.6% வாக்குகளை பெற்றிருக்கிறார். கடந்தாண்டு 19.1% வாக்குகளையே அவர் பெற்றிருந்தார். தொடர்ந்து மூன்றாம் இடத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 8.4% வாக்குகளுடன் உள்ளார், கடந்தாண்டு 8.1% வாக்குகளை பெற்ற இவர் தற்போது இதில் சரிவை சந்தித்துள்ளார். முதலிடத்திற்கும் அடுத்த இரண்டு இடத்திற்கும் மிகப் பெரிய வாக்கு வித்தியாசம் இருப்பதையும் பார்க்க முடிகிறது. 


தமிழ்நாடு முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் மிகவும் பிரபலமான முதல்வர்களின் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். கடந்தாண்டு 5.6 வாக்குகளை பெற்றிருந்த அவர் இம்முறை 5.5% வாக்குகளை பெற்றிருக்கிறார். அதேபோல், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கடந்தாண்டு 3% வாக்குகளை பெற்றிருந்த நிலையில், இம்முறை 2.5% வாக்குகளை பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளார். 


கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா 2.3% (கடந்தாண்டு - 1.4%), அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா 2% (கடந்தாண்டு - 2.2%), மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே 1.9% (கடந்தாண்டு - 1%), உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி 0.5% (கடந்தாண்டும் - 0.5%), குஜராத் முதல்வர் பூபேந்திரபாய் படேல் 0.4% (கடந்தாண்டு - 0.4%) என முறையே 6ஆவது இடம் முதல் 10ஆவது இடம் வரை உள்ளனர். 


மேலும் படிக்க | சவுத்ரி சரண் சிங், பி.வி. நரசிம்ம ராவ், எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது!


நீண்ட நாள்களாக ஆட்சியில் இருக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் டாப் 10இல் இடம்பெறவில்லை. இந்த டாப் 10 பட்டியலில், யோகி ஆதித்யநாத்,  ஹிமந்தா பிஸ்வா சர்மா, எக்நாத் ஷிண்ட், புஷ்கர் சிங் தாமி, பூபேந்திரபாய் படேல் என ஐந்து பேர் பாஜக மற்றும் அதன் கூட்டணியை சேர்ந்தவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. நாடு முழுவதும் உள்ள 35,801 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 


சொந்த மாநிலத்தில் செல்வாக்கான டாப் 10 முதல்வர்கள்


இதேபோன்று, சொந்த மாநிலத்திலேயே யார் அதிக செல்வாக்கு பெற்ற முதல்வர்கள் எனவும் ஆய்வு நடத்தப்பட்ட அதில் டாப் 10 பட்டியல் வெளியாகி உள்ளது. அதில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்  முதல் இடத்தை பிடித்துள்ளார். அதாவது ஒடிசா மக்களிடம் இவர் குறித்து கேள்வியெழுப்பட்டது. 


அதில், 52.7% சதவீதத்தினர் நவீன் பட்நாயக்கிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதற்கு அடுத்து உ.பி.யின் யோகி ஆதித்யநாத் (51.3%), அசாமின் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா (49.2%), குஜராத்தின் பூபேந்திரபாய் படேல் (42.6%), திரிபுராவின் மணிக் சாஹா (41.4%) என 2ஆம் இடம் முதல் 5ஆம் இடம் வரை உள்ளனர்.


கோவாவின் பிரமோத் சாவந்த் (41.1%), உத்தரகாண்டின் புஷ்கர் சிங் தாமி (40.1%), டெல்லியின் அரவிந்த் கெஜ்ரிவால் (36.5%) என 6ஆம் இடம் முதல் 8ஆம் இடம் வரை உள்ளனர். இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 9ஆவது இடத்தைதான் பிடித்துள்ளார். 35.8% வாக்குகளை மட்டுமே ஸ்டாலின் பெற்றுள்ளார். மம்தா பானர்ஜி 32.8% வாக்குகளை பெற்று 10ஆவது இடத்தில் உள்ளார். 


மேலும் படிக்க | Bharat Ratna Award: சரண் சிங், நரசிம்மராவ், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோர் பாரத ரத்னா விருது -பிரதமர் அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ