Travel pass: அரசுப் பேருந்துகளில் பிறந்த 2 குழந்தைகளுக்கு பயணம் என்றென்றும் இலவசம்
அரசுப் பேருந்துகளில் பிறந்த 2 குழந்தைகளுக்கு பிறந்தநாள் பரிசாக வாழ்நாள் பயணச் சீட்டு
தெலங்கானா மாநிலத்தில் அரசுப் பேருந்துகளில் பிறந்த 2 குழந்தைகளுக்கு பிறந்தநாள் பரிசாக வாழ்நாள் பயணச் சீட்டு வழங்கப்படுகிறது. மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகள், விமான நிலைய சிறப்புச் சேவைகள் உள்ளிட்ட அனைத்து வகையான பேருந்து சேவைகளுக்கும் இந்த பாஸ் செல்லுபடியாகும்.
நவம்பர் 30 அன்று மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள பெத்தகோதப்பள்ளி கிராமத்தில் அரசுப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது. அதேபோல, டிசம்பர் 7 ஆம் தேதியன்று சித்திபேட் மாவட்டம் அருகே அரசுப் பேருந்தில் (TSRTC) பயணித்துக் கொண்டிருந்த கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது.
"இந்த இரண்டு பெண்களுக்கும் அந்தந்த இடங்களுக்குச் செல்லும் போது எதிர்பாராத விதமாக பிரசவ வலி ஏற்பட்டது, மேலும் TSRTC குழு உறுப்பினர்கள் மற்றும் சக பயணிகள் அவர்களுக்கு குழந்தைகளைப் பெற உதவினார்கள்" என்று டிஎஸ்ஆர்டிசியின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சஜ்ஜனார் ஒரு டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு பெண்களும் பேருந்தில் பயணிக்கும் போது எதிர்பாராத விதமாக பிரசவ வலி ஏற்பட்டது. சக பயணிகள், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் என அனைவரும் பிரசவத்திற்கு உதவினார்கள். குழந்தை பிறந்ததும் தாயும் சேயும் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அரசு நடத்தும் தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (Telangana State Road Transport Corporation) பேருந்துகளில் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பிறந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளுக்கு "பிறந்தநாள் பரிசாக" வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணிப்பதற்கான பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகள், விமான நிலைய சிறப்புச் சேவைகள் உள்ளிட்ட அனைத்து வகையான பேருந்து சேவைகளுக்கும் இந்த பாஸ் செல்லுபடியாகும்.
ALSO READ | நெடுஞ்சாலையை கடக்கும் ராட்சஸ அனகோண்டா பாம்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR