சாலையில் நீங்கள் காரில் பயணிக்கும் போது உங்கள் ஒரு ராட்சஸ பாம்பு தோன்றினால் எப்படி இருக்கும்? நிச்சயம் நமக்கு என்ன செய்வது என்றே தெரியாமல் கையும் காலும் பதறும். ஒரு பிரம்மாண்டமான பாம்பு நெடுஞ்சாலையில் எங்கிருந்தோ வந்ததை பார்த்து, இந்த மக்களும் அப்படித் தான் திகைத்துப் போனார்கள். சிலர் பரபரப்புடம் வீடியோ எடுக்க தொடங்கினர்.
அனகோண்டாக்கள் (Anaconda) தென் அமெரிக்காவில் உள்ள மித வெப்பக் காடுகளில் காணப்படும் மிகப் பெரிய, நச்சுத்தன்மையற்ற போஅஸ் வகையைச் சேர்ந்த பாம்புகளாகும்.
இவை மனிதர்களைத் தாக்கும் என்றாலும் அவர்களை இரையாகக் கொள்வதில்லை. பொதுவாக மீன்கள், ஆடுகள், குதிரைகள் ஆகியவற்றையே இரையாக உண்ணுகின்றன. இவை அதிகமாக நீரிலேயே வாழ்கின்றன. இது தமிழில் ஆனைக் கொன்றான் என்றும் கூறபடுகிறது.
ALSO READ | Viral Video: ‘நாங்களும் ஜிம்முக்கு போவோம்ல’... அசத்தும் பூனைக் குட்டி..!!
வைரலாகும் வீடியோவில், 25 அடி நீளமுள்ள பச்சை நிற அனகோண்டா, நெடுஞ்சாலையின் நடுவில் ஊர்ந்து செல்வதைக் காணலாம். மக்கள் தங்கள் கார்களை நடுவழியில் நிறுத்திவிட்டு, அனகோண்டாவை பார்க்க வெளியே வந்தனர். அவர்கள் தங்கள் தொலைபேசிகளில் அனகோண்டாவின் வீடியோக்களை பதிவு செய்வதைக் காண முடிந்தது. இறுதியில், அனகோண்டா நெடுஞ்சாலையைக் கடக்கும்போது சிலர் மற்ற கார்களை அந்த வழியாகச் செல்வதைத் தடுப்பதையும் காணலாம். நெடுஞ்சாலையை கடக்கும் அந்த அனகோண்டா பாம்பு, பின்னர் புதர்களுக்குள் சென்று மறைந்துவிடுகிறது.
வைரல் வீடியோவை இங்கே காணலாம்:
வீடியோவின் பின்னணியில் மக்கள் பேசுவதைக் கேட்டால், இந்த சம்பவம் பிரேசிலில் நடந்தது போல் தெரிகிறது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் 'snake.wild' என்ற பயனர் பகிர்ந்துள்ளார் மற்றும் இதுவரை 194.5k வ்யூஸ்களை இந்த வீடியோ பெற்றுள்ளது.
ALSO READ | மாலையை தூக்கி எறிந்த மணமகள், திகைத்து நின்ற மணமகன்: அங்க ஒரு ட்விஸ்ட்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G