ஏப்ரல் - நவம்பர் வரை நேரடி வரி வசூல் ரூ.4.8 லட்சம் கோடி!!
ஏப்ரல் முதல் நவம்பர் வரையான கால கட்டத்தில் நேரடி வரி (Direct Tax) வசூல் ரூ.4 லட்சத்து 81 ஆயிரம் கோடி என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் முதல் நவம்பர் வரையான கால கட்டத்தில் நேரடி வரி (Direct Tax) வசூல் ரூ.4 லட்சத்து 81 ஆயிரம் கோடி என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு கூறியது:-
ஏப்ரல் முதல் நவம்பர் வரையான கால கட்டத்தில் நேரடி வரிக்கான வசூல் மொத்தம் ரூ.4 லட்சத்து 81 ஆயிரம் கோடி ஆகியுள்ளது.
இது கடந்த ஆண்டை விட 14.4% அதிகம். 2017-18-ம் ஆண்டில் ஒட்டு மொத்த நேரடி வரி வசூல் 9 லட்சத்து 80 ஆயிரம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வரையில் 40% வரி வசூல் ஆகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.