நாயை வெட்டி... மான் கறி என சொல்லி விற்ற இளைஞர்கள் - வாங்கி தின்ற `அப்பாவி` மக்கள்!
Bizarre News: நாயை கொன்று அதை மான் இறைச்சி என கூறி விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
Bizarre News: இறைச்சியை உண்ணுபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகம் எனலாம். சிக்கன், மட்டன், என்பதை விட மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி என பல்வேறு வகையான இறைச்சிகளை மக்கள் விரும்பி உண்கின்றனர். இறைச்சி இல்லை என்றால் திருமண பந்திக்கே செல்லாதவர்களையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிலர், அவ்வப்போது இறைச்சியை சாப்பிடுவார்கள், சில அதிகமாக அதனை எடுத்துக்கொள்வார்கள். இறைச்சி மீதான காதல் அளவிட முடியாதது.
அந்த வகையில், தெலங்கானா மாநிலத்தின் அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமங்களில், அருகில் உள்ள வனப்பகுதிகளில் முயல் மற்றும் முயல்களை பிடித்து விற்பனை செய்தும் சிலர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
அங்கு மேலும் சிலர், விதிகளை மீறி மான், மயில்களை வேட்டையாடுகின்றனர் என தகவல் கூறுகின்றன. குறிப்பாக, மான் கறி விற்பனை அதிக அளவில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. வனப்பகுதியின் தொலைதூரங்களில் மான் கறி விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றன. இதற்கிடையில், அந்த பகுதியை சேர்ந்த இருவர், கேட்டவுடனே மிரளவைக்கும் சம்பவம் ஒன்றை செய்திருக்கின்றனர்.
விஸ்வாத்திற்கு பெயர் பெற்ற செல்லப்பிராணியான நாய்களை வெட்டி, அதை மான் இறைச்சி என கூறி அவர்கள் விற்பனை செய்து வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதையும் உண்மையிலேயே மான் இறைச்சி என்று நினைத்து 'அப்பாவி' மக்கள் சிலரும் வாங்கிச் சென்றனர். நீண்டநாள் விற்பனைக்கு பிறகு இந்த உண்மை வெளியாகியுள்ளது.
தெலங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் லக்ஷ்மண சந்தா என்ற இடத்தில் ஒரு நாயை கொன்று, அதை மான் இறைச்சி என்ற பெயரில் விற்பனை செய்துள்ளனர்.. தற்போது இந்த சம்பவம் மாவட்டத்தில் பேசுபொருளாக உள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
லக்ஷ்மண சந்தா பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவரின் வளர்ப்பு நாய் என கண்டறிந்துள்ளனர். இவரது வளர்ப்பு நாயை சில நாட்களாக காணவில்லை. பாதிக்கப்பட்ட ஆனந்த் போலீசாரை அணுகினார். காவல் நிலையம் சென்று தனது வளர்ப்பு நாயை காணவில்லை என்று புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் நாயை தேடும் பணியில் ஈடுபட்டனர். விசாரணையின் ஒரு பகுதியாக, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், சமன்பள்ளியை சேர்ந்த வருண் மற்றும் பார்பள்ளியை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் ஆகியோர் நாயை கடத்தி சென்றது தெரியவந்தது.
அதன்பிறகு இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் உண்மை வெளியே வந்தது. கடத்தப்பட்ட நாயை கொன்று மான் இறைச்சி என கூறி விற்பனை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாக லக்ஷ்மண சந்தா காவல் நிலையத்தின் உதவி காவல் ஆய்வாளர் ராகுல் கூறினார். எனினும் மான் இறைச்சி என கூறப்பட்ட நாய் இறைச்சியை உண்டவர்களின் விபரங்களையும் போலீசார் சேகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராமச்சந்திரன் விஸ்வநாதன் யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ