தீபாவளி பரிசாக, பாகிஸ்தான் மக்களுக்கு சிறப்பு பரிசினை அளிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். 


சிகிச்சைக்காக இந்தியாவிற்கு வருவதற்காக விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் விரைவில் அனுமதி அளிக்கப்படும். தீபாவளியின் சிறப்பு பரிசாக, இந்தியா வர விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு விரைவில் விசாக்கள் வழங்கப்படும் என அவர் ட்விட்டரில் பதிவிட்டுளாளர். 



நேற்று அக்டோபர் 18-ஆம் நாள் வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ஐந்து பாக்கிஸ்தானியர்களுக்கு மருத்துவ விசா வழங்கினார்.


இந்தியாவில் இருந்து மருத்துவ விசாக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் பாக்கிஸ்தானிய மக்களுக்கு ஸ்வராஜ் உதவது இது முதன்முறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.