Bank தெரியும், ஆனால் குழந்தைகளுக்கான Toy Bank பற்றித் தெரியுமா?
Bank தெரியும், ஆனால் குழந்தைகளுக்கான Toy Bank பற்றித் தெரியுமா? முதல் பொம்மை வங்கி டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது
புதுடெல்லி: குழந்தைகளின் Toy Bank பற்றித் தெரியுமா? இது பணத்தை சேமித்து வைக்கும் வங்கி அல்ல, குழந்தைகள் தங்கள் விளையாட்டு பொம்மைகளை வைக்கும் வங்கி. உண்மை தான், இப்படி ஒரு வங்கி முதன்முதலில் தலைநகர் டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள நஜாப்கர் (Najafgarh) என்ற பகுதியில் இந்த Toy Bank தொடங்கப்பட்டுள்ளது.
ஸ்வச் சர்வேஷன் -2021 ஐ ( Swachh Survekshan-2021) கருத்தில் கொண்டு தெற்கு டெல்லி மண்டலத்தில் Toy Bank தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு டெல்லியின் மேயர் அனாமிகா மிதிலேஷ் சிங் (Anamika Mithilesh Singh), கூறுகிறார். முதல் Toy Bankஐ துவக்கி வைத்த அவர், பழைய பொம்மைகளை (Toys) தூக்கி வீசுவதற்கு பதிலாக இந்த Toy Bankஇல் நன்கொடையாகக் கொடுக்கலாம் என்று மக்களைக் கேட்டுக் கொண்டார்.
பொம்மைகளை வாங்க முடியாத குழந்தைகளுக்காக (Children) இந்த Toy Bank திறக்கப்பட்டுள்ளது. இந்த பொம்மை வங்கிக்கான முன்முயற்சியை தெற்கு டெல்லி மாநகராட்சி (SDMC) எடுத்துள்ளது.
Also Read | 64 வயதில் NEET-ல் தேர்ச்சி பெற்று MBBS-ல் சேர்ந்த ஓய்வுபெற்ற SBI அதிகாரி
முதல் Toy Bankஐ துவக்கி வைத்த தெற்கு டெல்லி மேயர் அனாமிகா மிதிலேஷ் சிங் (Anamika Mithilesh Singh), "பொம்மைகளை வாங்க முடியாத குழந்தைகள் இந்த இடத்திற்கு வந்து விளையாடலாம், ஆசைப்பட்டால் இந்த பொம்மைகளையும் எடுத்துச் செல்லலாம்," என்று கூறினார்.
இந்த வங்கி நஜாப்கர் மண்டலத்தின் துவாரகா பிரிவு 23 இல் உள்ள தெற்கு டெல்லி மாநகராட்சி (SDMC) சமூக மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
“இது ஒரு முமுயற்சி, அப்பாவி குழந்தைகளின் முகத்தில் புன்னகையைத் கொண்டு வருவதற்கான முயற்சி. அதே நேரத்தில், பழைய மற்றும் பயன்படுத்தப்படாத பொம்மைகளின் வடிவத்தில் கழிவுகளை (Wastage) உருவாக்குவதைக் குறைப்பதற்கான முயற்சி என்றும் சொல்லலாம். தூக்கி வீசப்படும் பொம்மைகள் குப்பை மற்றும் கழிவுகளாக மாறும். நன்கொடையை ஊக்குவிப்பதற்கும், பொம்மைகளை வீணாக்குவதைக் குறைப்பதற்கும் இது ஒரு தனித்துவமான வழியாகும், இந்த பொம்மைகள் பெரும்பாலும் பிளாஸ்டிக் (Plastic) மற்றும் ரோமங்களால் ஆனது”என்று மேயர் சொல்கிறார்.
Also Read | கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா - விக்னேஷ் சிவன் - வைரலாகும் புகைபடம்!
ஸ்வச்ச்தா சர்வேஷன் -2021 சிறப்பாக செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ‘பொம்மை வங்கி’ திறப்பதற்கான முயற்சி அதன் ஒரு பகுதி என்றும் நஜாப்கர் மண்டல துணை ஆணையர் ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவி றக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR