கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா - விக்னேஷ் சிவன் - வைரலாகும் புகைபடம்!

லேடி சூப்பர்ஸ்டார் நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது..!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 26, 2020, 01:05 PM IST
கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா - விக்னேஷ் சிவன் - வைரலாகும் புகைபடம்! title=

லேடி சூப்பர்ஸ்டார் நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது..!

தமிழ் திறையுலகின் ஹாட் காதலர்களான நயன்தாரா (Nayanthara) மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் (Vignesh Sivan) ஜோடி தினம் தினம் தங்களது ரசிகர்களுக்கு பல கியூட் புகைப்படங்களை பகிர்ந்து வருக்கினறனர். கடந்த சில வருடங்களாகவே தீவிரமாக காதலித்து வரும் இந்த ஜோடி அடிக்கடி வெளிநாடு சென்று விதவிதமான, நெருக்கமான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "நானும் ரவுடிதான்". இந்த திரைப்படத்தில் பணியாற்றிய போது இருவரும் காதலிக்க தொடங்கினார்கள் என்றும், இவர்களது ஐந்து வருட காதல், இந்தவருடம் முடிவுக்கு வந்து இந்த ஆண்டு திருமணம் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றனர். 

ALSO READ | See Pic's: இணையத்தை கலக்கும் லேடி சூப்பர் ஸ்டாரின் லேடஸ்ட் புகைப்படம்!

இந்நிலையில், நடிகை நயன்தாரா அண்ணாத்த (Annaatthe) மற்றும் காத்துவாக்குள ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கிற்காக, கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி ஹைதராபாத் சென்ற நடிகை நயன்தாராவின் போட்டோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தாவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் (Kaathu Vaakula Rendu Kaadhal) படத்தின் ஷூட்டிங்கிற்காக, தனது அண்ணாத்த ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நயன்தாரா படக்குழுவினருடன் டீம் டின்னர் சாப்பிட்ட போட்டோ சமீபத்தில் இணையத்தில் பரவி வைரலானது.

இந்நிலையில், தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை (christmas celebration) முன்னிட்டு காதலர் விக்னேஷ் சிவனுடன் எடுத்துக் கொண்ட செம க்யூட்டான போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போல்கா டாட் போட்ட சின்ன ஸ்கர்ட் அணிந்து கொண்டு செம ஸ்டைலாக நின்று போஸ் கொடுத்துள்ள நயன்தாராவுக்கு ரசிகர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்..

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News