BJP Donation For Nation Building: மக்களவை தேர்தல் தேதி மற்றும் அட்டவணை இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்தியாவின் மிகப்பெரும் பொதுத் தேர்தலான இதன் வாக்குப்பதிவு பல்வேறு கட்டங்களாக நாடு முழுவதும் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும். அதேபோல், மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் மே மாதம் நடைபெறும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், பாஜக ஒரு அடி முன்னாடி சென்று 195 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் நேற்று அறிவித்தது. மற்ற கட்சிகளைவிட பாஜக எப்போதும் தேர்தல் பணியை விரைவாக தொடங்கும் என்பதற்கு இது ஒரு உதராணம். அதேபோல், கட்சி நிதி திரட்டிலும் முன்னணியை பெற்றுள்ளது. 


பிரதமர் மோடி அளித்த நன்கொடை


அந்த வகையில், NaMo செயலி மூலம் 'தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான நன்கொடை' பிரச்சாரத்தில் நிதி பங்களிப்பு செய்ய தனது X பக்கத்தின் வாயிலாக மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இன்று அழைப்புவிடுத்தார்.  மேலும், அந்த பதிவில், "பாஜகவிற்கு பங்களிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். வலிமையான நாட்டை உருவாக்குவதற்கான எங்கள் முயற்சிகளை வலுப்படுத்துகிறேன். NaMoApp மூலம்  Donation For Nation Building பிரச்சாரத்தில் நன்கொடை அளித்து பங்களிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார். 


மேலும் படிக்க | 'வலியை அனுபவித்தேன்...' மேடையில் பேசிய ஆனந்த் அம்பானி... கண்ணீர் விட்ட முகேஷ் அம்பானி


பாஜகவுக்கு அவர் அளித்த நன்கொடையின் ரசீதையும் பிரதமர் மோடி அவரது பதிவில் பதிவேற்றி உள்ளார். பிரதமர் மோடி தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான நன்கொடை பிரச்சாரத்தில் 2 ஆயிரம் ரூபாயை அளித்துள்ளார். இது அவர் பகிர்ந்த நன்கொடை ரசீதின் வாயிலாக தெரியவந்தது. பாஜகவின் இந்த நன்கொடை பிரச்சாரம் கடந்த மார்ச் 1ஆம் தேதி அன்று அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜேபி நட்டாவால் தொடங்கப்பட்டது, அவர் கட்சிக்கு அன்று 1,000 ரூபாய் நன்கொடை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 



தேர்தல் பத்திரங்கள் ரத்துக்கு பின்...


ஜே.பி. நட்டா அவரது X பக்கத்தில், "நம் நாட்டை வலுவாக்குவதற்கான பிரதமர் மோடியின் தொலைநோக்குத் திட்டங்களுக்கு எனது தனிப்பட்ட ஆதரவை உறுதியளிக்க நான் பாஜகவுக்கு நன்கொடை அளித்துள்ளேன். நாம் அனைவரும் முன் வந்து தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான நன்கொடை பிரச்சாரத்தில் இணைவோம். NaMo செயலி மூலம் இதனை மேற்கொள்ளவும்" என பதிவிட்டிருந்தார்.


கடந்த 2017ஆம் ஆண்டில் பாஜக தலைமையிலான மத்திய அரசால் தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு நிதி திரட்டப்பட்டது. இந்த தேர்தல் பரத்திரங்கள் அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக கூறி உச்ச நீதிமன்றம் அதற்கு கடந்த மாதம் தடை விதித்தது உத்தரவிட்டது. அந்த தீர்ப்பிற்கு சில வாரங்களுக்குப் பின், தற்போது பாஜக தனது மாற்று நன்கொடை பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறது. ஏனென்றால், பாஜகவின் மொத்த வருவாயில், தேர்தல் பத்திரங்களின் நிதி பாதியளவுக்கும் மேலானது ஆகும். 


பாஜக கடந்த 2022-2023ஆம் நிதியாண்டில் சுமார் ரூ. 719 கோடியை நன்கொடை நிதியாக பெற்றது, அதேபோல், 2021-22ஆம் நிதியாண்டில் ரூ.614 கோடியை பாஜக வசூலித்துள்ளது. அதாவது, 2021-2022 நிதியாண்டை விட 17 சதவீதம் அதிகமாக 2022-2023 நிதியாண்டில் பாஜக நன்கொடை பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பாஜக உடன் காங்கிரஸை ஒப்பிட்டால் அக்கட்சி மிகக்குறைவாகவே நிதி திரட்டியிருக்கிறது. காங்கிரஸ் 2021-2022ஆம் நிதியாண்டில் 95.4 கோடியையும், 2022-2023 நிதியாண்டில் ரூ.79 கோடியையுமே பெற்றிருக்கிறது.


மேலும் படிக்க | பாஜக முதல் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே முஸ்லிம் வேட்பாளர்: யார் அந்த டாக்டர் அப்துல் சலாம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ