இந்தியாவுக்கு முதல் ஆஸ்கர் பெற்று தந்த பானு அதையா 91 வயதில் காலமானார்...
Oscar விருது பெற்ற முதல் இந்தியர் ஆடை வடிவமைப்பாளர் பானு அதையா. 91 வயதான அவர் அக்டோபர் 15ஆம் தேதியன்று வியாழக்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார்.
புதுடெல்லி: Oscar விருது பெற்ற முதல் இந்தியர் ஆடை வடிவமைப்பாளர் பானு அதையா. 91 வயதான பானு அதையா (Bhanu Athaiya) அக்டோபர் 15ஆம் தேதி வியாழக்கிழமையன்று உடல்நலக்குறைவால் காலமானார். 91 வயதான தனது தாயின் மறைவுச் செய்தியை இந்தத் தகவலை அவரது மகள் அறிவித்தார்.
பிரபல ஆடை வடிவமைப்பாளரான பானு அதையா பல்வேறு பரிசுகளை பெற்றவர். அனைவராலும் அறியப்பட்டவர். பல திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர். 1983 ஆம் ஆண்டு வெளியான 'Gandhi' திரைப்படத்தில் அருமையாக ஆடை வடிவமைப்பு செய்ததற்காக ஆஸ்கார் விருதை பெற்றார்.
காந்தி திரைப்படம், இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. அந்த திரைப்படத்தின் தாக்கத்திற்கு, பானு அதையாவின் பொருத்தமான ஆடை வடிவமைப்பு மெருகூட்டியது. இதற்காக உலகம் முழுவதும் பாராட்டுகளையும், பரிசுகளையும் அள்ளிக் குவித்தார் பானு அதையா.
அனைத்து பாராட்டுகளுக்கும் கிரீடம் வைத்ததுபோல, அவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. அதிலும் இந்தியாவைச் சேர்ந்த ஒருவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது அதுதான் முதல் முறை என்பதால் நாடே பானு அதையாவை கொண்டாடியது.
அதிலும், இந்தியாவிற்காக முதல் ஆஸ்கர் விருதை வென்றவர் ஒரு பெண் என்பதால் அனைவருக்கும் மகிழ்ச்சி இரட்டிப்பானது என்றே சொல்லலாம்.
தற்போது 91 வயதான பானு அதையா, உறங்கிக் கொண்டிருக்கும்போதே காலமானார் எனஅவரது மகள் ராதிகா குப்தா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
ஆஸ்கர் விருது என்ற மகுடத்தை தலையில் சூட்டிய முதல் இந்தியப் பெண்மணி பானு அதையாவின் இறுதிச் சடங்குகள் தெற்கு மும்பையில் உள்ள சந்தன்வாடி தகன மைதானத்தில் நடந்தன.
"அம்மா இன்று அதிகாலையில் காலமானார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவரது மூளையில் கட்டி ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக, அவர் படுக்கையில் இருந்தார், அவரின் உடலின் ஒரு பகுதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தது" என்று பானு அதையாவின் மகள் ராதிகா தெரிவித்தார்.
ஆஸ்கர் செய்தி | “எனக்கு எதிராக பாலிவுட்டில் ஒரு பெரிய கும்பல் உள்ளது”: இசைப்புயல் AR Rahman!!
கோலாப்பூரில் பிறந்த அதையா, 1956 ஆம் ஆண்டு குரு தத்தின் சூப்பர்ஹிட் திரைப்படமான 'CID' மூலம் இந்தி திரைப்பட உலகில் ஆடை வடிவமைப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
ஜான் மோல்லோவுடன் இணைந்து ரிச்சர்ட் அட்டன்பரோவின் (Richard Attenborough) 'காந்தி' படத்தில் சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான ஆஸ்கர் அகாடமி விருதை வென்றார் பானு. தனது ஆஸ்கார் விருது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விரும்பிய பானு அதையா, அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸிடம் (Academy of Motion Picture Arts and Sciences) 2012 ஆம் ஆண்டில், அதனை ஒப்படைத்தார்.
ஐந்து தசாப்தங்களாக திரையுலகில் பணியாற்றிய பானு அதையா, நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இரண்டு தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். குல்ஸாரின் 'Lekin' (1990) மற்றும் அசுதோஷ் கோவாரிகர் இயக்கிய 'Lagaan' (2001)திரைப்படத்திற்கும் பானு அதையாவுக்கு தேசிய விருதுகள் கிடைத்தன.
Read Also | அதிர்ச்சி சம்பவம்.. மனைவியை 1 ½ வருட காலம் பாத்ரூமில் அடைத்து வைத்திருந்த கணவன்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR