எட்டுவயது சிறுமியின் மூலையில் சுமார் 100 நாடா புழுக்களின் முட்டையை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குருக்ரம்: எட்டு வயதுடைய சிறுமி ட்ருஷிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த மாதங்களாக கடுமையான தலைவலி மற்றும் வலிப்பு நோயால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து, இறுதியில், ட்ருஷிகாவை ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 


இதையடுத்து, மருத்துவர் ட்ருஷிகாவுக்கு தலையில் CT ஸ்கேன் எடுப்பதற்காக பரிந்துரை செய்துள்ளார். இதையடுத்து, CT ஸ்கேனின் ரிசல்ட்-டை பார்த்து மருத்துவர் அதிர்ச்சியடைந்துள்ளார். அதில், சிறுமியின் மூலையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடாபுழுக்களின் முட்டை இருப்பதை கண்டறிந்துள்ளனர்.  


இந்த நாடா புழுக்கலானது சிறுமியின் வயிற்றில் இருந்து இரத்த ஓட்டத்தின் மூலம் அவரது மூளையை அடைந்த நாடா புழுக்கள் மூலையில் முட்டையிட்டுள்ளதை கண்டறிந்துள்ளனர். சிகிச்சை தாமதத்தால் அவருக்கு மூளை வீகமடைந்துகொண்டே வந்துள்ளது. இதனால், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு நடக்க முடியாத நிலைக்கு தள்ளபட்டார்.   


மேலும், இவருக்கு என்னதான் மேல்நாட்டு மருந்துக்களை பரிந்துரைத்தாலும் தலைவலியையும், வலிப்பையும் நிறுத்தமுடியவில்லை. இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் அந்த கருமுட்டைகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இதன் பின்னர் மருத்துவர் கூறுகையில், தற்போது இவரின் மூளை வீக்கம் படிப்படியாக குறைந்து வருவதாகவும், இன்னும் சில நாட்களில் இவர் எழுந்து நடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.


இதை தொடர்ந்து, சிறுமி ட்ருஷிகா தான் மீண்டும் மகிழ்ச்சியுடன் பள்ளிசெய்வதை நினைத்தும் நடனமாடுவதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.