ஆக்ரா:  பொதுவாக நமக்கு ஏதேனும் உடல்நலக்குறைவு அல்லது விபத்து போன்றவை ஏற்பட்டால் தான் மருத்துவமனைக்கு செல்வோம். மேலும் நாம் வளர்க்கும் செல்லப்பிராணிகள் கால்நடைகள் போன்றவற்றிற்கு ஏதேனும் உபாதைகள் ஏற்பட்டாலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது வழக்கம்.  இதுவே நீங்கள் வைத்திருக்கும் பொம்மைகள், பொருட்கள் அல்லது சிலைகள் போன்றவை உடைந்து விட்டால் அதனை சரிசெய்ய மருத்துவமனைக்கு கொண்டு செல்வீர்களா? இதுபோன்ற ஒரு செயல் தான் உ.பி.யில் நிகழ்ந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ தாஜ்மஹால் போன்று வீடு கட்டி மனைவிக்கு பரிசளித்த கணவன்!


கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆக்ராவில் ஒரு அரசு மருத்துவமனையில் ஒரு வேடிக்கையான சிகிச்சை ஒன்று நடந்துள்ளது அந்த சிகிச்சை தற்போது வைரலாகி நெட்டிசன்களை கவர்ந்து வருகிறது.  உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றிற்கு பூசாரி ஒருவர் அலறியடித்துக்கொண்டு பதற்றத்துடன், ஒரு பெரிய துணிக்குள் ஏதோ ஒரு பொருளை சுருட்டி வைத்துக் கொண்டு ஓடிவந்து ஒரு வேடிக்கையான விஷயத்தை மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.



அதாவது, தீவிர கிருஷ்ணர் பக்தரான இவர் தன் வீட்டில் ஒரு குழந்தை கிருஷ்ணர் சிலையை வைத்து அதற்கு தினமும் படையலிட்டு, நைவேத்தியம், பூஜை, புனஸ்காரங்களை அன்றாடம் செய்து வந்துள்ளார்.  அவ்வாறு வழக்கம்போல் அந்த சிலைக்கு பூஜை செய்து கொண்டிருக்கும் பொழுது, கிருஷ்ணரின் கை தனியாக உடைந்து கீழே விழுந்து விட்டது. அந்த கையை சிகிச்சை மூலம் சரி செய்யவே மருத்துவமனையை நாடியதாக அவர் தெரிவித்தார்.  இந்த செய்தி அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. 


அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவரிடம் இதனை மருத்துவமனையில் சரி செய்ய இயலாது என்று அந்த முதியவரிடம் எவ்வளவோ எடுத்துக் கூறினார்.  ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தாது, தனது கிருஷ்ணர் சிலைக்கு சிகிச்சை அளித்து சரி செய்து தருமாறு மருத்துவர்களிடம் கதறினார்.  இதனையடுத்து மருத்துவர்கள் வேறுவழியின்றி வழக்கமாக நோயாளிகளின் பெயரை பதிவு செய்வது போல் இந்த சிலையையும் 'ஸ்ரீ கிருஷ்ணர்' என்ற பெயரில் பதிவு செய்து சிகிச்சை அளித்து கையை ஒட்டவைத்து அவரிடம் ஒப்படைத்தனர்.  இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ALSO READ மேலாடையை நீக்காமல் தொடுவதும் பாலியல் வன்முறை தான்: உச்ச உச்ச நீதிமன்றம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR