புது டெல்லி: காரில் செல்லும் போது, ஒரு நபர் மட்டும் இருந்தால் முகமூடி அணிய வேண்டியதில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் (Rajesh Bhushan), காரில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இருந்தால், தொற்று பரவாமல் இருக்க முகமூடி அணிவது அவசியம் என்று தெளிவுபடுத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதேபோல், ஒரு நபர் வெளியில்-உடற்பயிற்சி செய்யும் போதோ, சைக்கிள் ஓட்டி செல்லும் போதோ முகமூடி அணியத் தேவையில்லை என்றார்.


கடந்த சில நாட்களில், உடல் செயல்பாடுகளின் நன்மைகள் குறித்து மக்கள் விழிப்புணர்வைப் பெற்றுள்ளனர். மக்கள் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் உடற்பயிற்சி செய்வது அல்லது குழுக்களாக ஜாகிங் வாக்கிங் செய்வதை நாங்கள் கண்டிருக்கிறோம். மக்கள் ஒரு குழுவுடன் இருக்கும்போது முகமூடி அணிவது மற்றும் சமூக தூரத்தை பின்பற்றுவது கட்டாயமாகும். 


ALSO READ |  ஆண்களை விட பெண்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகம்: ஆய்வில் தகவல்!


அதாவது உடற்பயிற்சி அல்லது ஜாகிங் செய்யும் போது, ​​அவர்கள் ஒருவருக்கொருவர் பாதிக்காதபடி தூரத்தை கடைபிடிக்க வேண்டும். ஒரு நபர் தனியாக சைக்கிள் ஓட்டினால், அவர் முகமூடி அணியத் தேவையில்லை என்று பூஷண் கூறினார்.


இதற்கிடையில், இந்தியாவில் COVID-19 தொற்று எண்ணிக்கை 38,53,407 ஆக உயர்ந்தது. இறப்பு எண்ணிக்கை 67,376 ஐ எட்டியுள்ளது.


இருப்பினும், ஒரே நாளில் நாடு அதிக COVID-19 தொற்றில் இருந்து அதிக அளவில் குணமடைந்தவர்களை பதிவு செய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 68,584 நோயாளிகள் மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இது மீட்கப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையை 2,970,492 ஆக உயர்ந்துள்ளது


ALSO READ |  இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி உங்கள் முகமூடியை சுத்தம் செய்யவும்..!


சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவின் மீட்பு விகிதம் 77 சதவீதத்தை தாண்டியுள்ளது. மீட்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 21.5 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.