நியூடெல்லி: இந்தியாவில் உள்ள உள்நாட்டு பயணிகள் இப்போது டிஜி யாத்ரா மூலம் விமான நிலையங்களில் சிரமமின்றி பயணம் செய்யலாம், முகத்தை அடையாளம் காணும் இந்த தொழில்நுட்ப வசதி, இப்போது டெல்லி, பெங்களூரு மற்றும் வாரணாசியிலிருந்து கிளம்பும் விமானங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. டிஜி யாத்ராவில் தங்களைப் பதிவுசெய்த பயணிகள், விமானத்தின் உள்நுழைவின்போது தங்கள் அடையாள அட்டையைக் காட்ட வேண்டியதில்லை. டிஜியாத்ரா (DY) என்ற பயோமெட்ரிக் முக அங்கீகார தளத்தில் பதிவு செய்வதன் மூலம் இந்திய பயணிகள்  பயன்பெறலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பயோமெட்ரிக் முக அங்கீகார தொழில்நுட்பம் மூலம் காகிதமில்லா பயணத்தை செயல்படுத்தும் இந்த முறையில், முக ஸ்கேன் DY-பதிவு செய்யப்பட்ட பயணிகளின் அடையாளத்தை உறுதி செய்யும். அனைத்து பயண விவரங்களும் இந்த பிளாட்பாரத்தில் பதிவு செய்யப்படும். இதில் ஒருமுறை பதிவு செய்துவிட்டால், பயணிகள் தங்களது எந்தவொரு அடையாள ஆதாரத்தையும் எங்கும் காட்ட வேண்டியதில்லை.



இந்த தொழில்நுட்பம், 2022 டிசம்பர் முதல் நாளன்று, டெல்லி, பெங்களூரு மற்றும் வாரணாசியில் தொடங்கி முதல் கட்டமாக 7 விமான நிலையங்களில் அமலானது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள், ஹைதராபாத், கொல்கத்தா, புனே மற்றும் விஜயவாடா விமான நிலையங்களிலும் இந்த வசதி தொடங்கப்படும்.


இந்த தொழில்நுட்பத்தை படிப்படியாக அனைத்து இந்திய விமான நிலையங்களுக்கும் கொண்டு செல்ல விமான போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது, இது பயணிகளின் நேரத்தை குறைத்து, அவர்களின் பயணத்தை சிரமமின்றி மாற்றும்.


மேலும் படிக்க | காங்கிரஸின் 100 தலை ராவணன் கமெண்டுக்கு பதிலடி கொடுக்கும் பிரதமர் மோடி


இத்திட்டம் குறித்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா இவ்வாறு கூறுகிறார். விமான நிலையங்களில் உள்ள பல்வேறு சோதனைச் சாவடிகளில் பயணிகள் தங்களுடைய போர்டிங் பாஸுடன் இணைக்கப்படக்கூடிய முக அம்சங்களைப் பயன்படுத்தி காகிதமற்ற மற்றும் தொடர்பு இல்லாத செயலாக்கத்தின் மூலம் பயணிக்கலாம். ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு மற்றும் சுயமாக புகைப்படம் எடுத்து, DY செயலியில் ஒரு முறை பதிவு செய்தால் போதும். பயணிகளின் வசதி மற்றும் பயணத்தை எளிதாக்குவதில் இந்தத் திட்டம் மிகப்பெரிய நன்மைகளைக் கொண்டுள்ளது".


டெர்மினல் நுழைவு முதல், செக்-இன், பாதுகாப்பு மற்றும் குடியேற்றம் வரை விமான நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. எனவே, இதை கருத்தில் கொண்டு, ஓமிக்ரான் வகை கோவிட் வழக்குகள் அதிகரித்த பிறகு இந்த டிஜியாத்ரா திட்டம் முன்னெடுக்கப்பட்டது. DYஐப் பயன்படுத்துவது என்பது தற்போது கட்டாயமாக்கப்படவில்லை. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த விரும்பும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். மற்றவர்கள் வழக்கம்போல, தங்கள் ஐ.டிக்களை காட்டி பயணிக்கலாம்.  


டிஜியாத்ராதொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் விமான நிலையங்களில், துபாய் சர்வதேச விமான நிலையம் முதன்மையானது. இந்த டிஜியாத்ரா வசதியானது, விமான நிலையத்தில் செலவிட வேண்டிய நேரத்தின் 40 சதவீதம் வரை சேமிக்கிறது.


மேலும் படிக்க | Ludhiana Court Blast : தீவிரமாக தேடப்பட்ட பயங்கரவாதி கைது!


டிஜி யாத்ராவில் சேருவதற்கான செயல்முறை என்ன?
அ) பயணிகள் பின்வரும் தகவல்களை வழங்குவதன் மூலம் மத்திய அமைப்பில் டிஜி யாத்ரா ஐடியை உருவாக்கலாம்:
1. பெயர், 2. மின்னஞ்சல் முகவரி, 3. தொலைபேசி எண் 4. தனிப்பட்ட தகவல் (வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம், ஆதார் போன்றவை)


b) இந்த தகவல்களை சமர்ப்பித்தவுடன் டிஜி யாத்ரா ஐடி உருவாக்கப்படும். இந்த எண்ணை பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பயன்படுத்தலாம். டிஜி யாத்ரா ஐடிகள் உட்பட பயணிகளின் தரவை விமான நிறுவனங்கள் புறப்படும் விமான நிலையத்திற்கு அனுப்பும்.


c) முதல் பயணத்தில், பயணிகள் தங்கள் ஐடியை சரிபார்க்க விமான நிலையத்தின் பதிவு கியோஸ்கிற்குச் செல்ல வேண்டும்.
1. ஆதார் விஷயத்தில், ஆன்லைனில் சரிபார்ப்பு செய்யப்படும். 2. CISF வேறு எந்த ஐடியையும் கைமுறையாகச் சரிபார்க்கும்.
வெற்றிகரமான சரிபார்ப்புக்குப் பிறகு, பயணிகளின் புகைப்படம் மத்திய அமைப்பில் உள்ள டிஜி யாத்ரா சுயவிவரத்தில் சேர்க்கப்படும்.


மேலும் படிக்க | 'போதை பொருளை பயன்படுத்தியதாக எழுதிக்கொடு’ - டார்ச்சர் செய்த டீச்சர் உயிரை விட்ட மாணவர்


டிஜி யாத்ரா மூலம் பயணிகளுக்கு என்ன நன்மைகள்?
1. பல சோதனைச் சாவடிகளில் போர்டிங் பாஸ் ஐடியைக் காட்ட வேண்டிய அவசியமில்லை.


2. வரிசைகளில் நிற்கும் நேரம் குறைவதோடு, குறைந்தபட்ச மனித தலையீடு இருக்கும்.


3. பயணிகளின் PNR ஐ சிஸ்டம் மேப்பிங் மூலம் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு.


4. விமான நிலைய ஆபரேட்டரிடம் பயணிகளின் வரத்து மற்றும் வள திட்டமிடல் பற்றிய நிகழ் நேரத் தகவல் இருக்கும்.


5. விமான நிலையத்தில் பயணிகளின் நிலையை அறிந்து விமான நிறுவனங்கள் பயனடையும்.


மேலும் படிக்க | ரகசிய காவல் நிலையங்களை உலகம் முழுவதும் வைத்துள்ள சீனா! கண்டிக்கும் கனடா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ