ரகசிய காவல் நிலையங்களை உலகம் முழுவதும் வைத்துள்ள சீனா! கண்டிக்கும் கனடா

Chinese police overseas service stations: கனடாவில் அதிகாரபூர்வமற்ற "போலீஸ்" நிலையங்களைத் திறந்தது தொடர்பாக சீனத் தூதரிடம் கனடா விசாரித்துள்ளது. 

ஒட்டாவாவில் உள்ள காவல் நிலையங்கள் குறித்து முறையாக கவலைகளை எழுப்பியுள்ளது தொடர்பாக விசாரித்ததாக, கனடாவின் வெளியுறவு அமைச்சகத்திற்கான வட ஆசியாவின் தலைமை இயக்குனர் வெல்டன் எப், கனடா-சீனா உறவுகள் குறித்த சிறப்பு பாராளுமன்றக் குழுவிடம் கூறினார்.

1 /5

சீன பொது பாதுகாப்புப் பணியகங்கள் உலகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளதாக, ஸ்பெயினைத் தளமாகக் கொண்ட Safeguard Defenders என்ற என்.ஜி.ஓ தெரிவித்துள்ளது.

2 /5

"வெளிநாட்டு காவல் சேவை நிலையங்கள்" போல செயல்படும் சீனாவின் பாதுகாப்பு பணியகங்கள்

3 /5

நாடு கடந்த குற்றங்களை சமாளிப்பதற்கும் வெளிநாடுகளில் உள்ள சீன பிரஜைகளுக்கு வெளிநாட்டில் ஓட்டுநர் உரிமங்களைப் புதுப்பித்தல் மற்றும் பிற தூதரக சேவைகள் போன்ற நிர்வாக சேவைகளை வழங்குவதற்கும் இந்த பிரிவுகள் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது

4 /5

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை விமர்சிப்பவர்களை சீன அரசாங்கம் துன்புறுத்துவது, பின்தொடர்வது, கண்காணித்தல் மற்றும் அச்சுறுத்துவது தொடர்பான வேலைகளை பொதுப் பணியகம் மூலம் செய்கிறது

5 /5

ஆனால், பொதுப்பணியகம் போன்ற வெளிநாட்டு நிலையங்களை இயக்குவதாக வெளிவரும் தகவல்களை சீனா மறுத்துள்ளது.