காவல் நிலையத்தில் போலீசாரை குற்றவாளி ஒருவர் மண்வெட்டியால் தாக்கி தாக்கியதில் காவலர் பலி...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை காவல் நிலையத்தில் கைதியாக வைக்கப்பட்டிருந்த ஒருவர் மண்வெட்டியால் 2 காவலர்களை பலமாக தாக்கி விட்டு தனது கூட்டாளியுடன் தப்பிச்சென்றார். இத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாபை கிளப்பியுள்ளது. இந்த சம்பவம் ஆவல்துரையில் போருத்தபட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. 


இந்த வீடியோவின் உதவியுடன் அந்த குற்றவாளிகளை காவல்துறையனர் பிடித்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் விஷ்ணு ராவத் மற்றும் அவரது நண்பர் மன்சிங் ஆகியோர் சட்டவிரோதமாக சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கைது செய்த போலீசார் விசாரணைக்காக இருவரையும் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். 


அவர்களுக்கு பாதுகாப்பாக ஒரு ஹெட் கான்ஸ்டபிள் உள்பட 2 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த மண்வெட்டியால் விஷ்ணு ராவத் போலீசார் இருவரையும் பலமாகத் தாக்கினார். இதில் இருவரும் மயக்கமடைந்தனர். இதையடுத்து, கூட்டாளியுடன் விஷ்ணு தப்பிச் சென்று விட்டார். அடுத்த சில மணி நேரங்களில் சிசிடிவி கேமரா உதவியுடன் போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர். 


காயமடைந்த ஹெட் கான்ஸ்டபிள் உமேஷ் பாபுவின் நிலைமை சற்று கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர் தெரிவித்திருந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர்கள் இருவர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.