ஹெலினா (இராணுவ பதிப்பு) மற்றும் துருவாஸ்திரா (விமானப்படை பதிப்பு) ஏவுகணை அமைப்புகள் வெள்ளிக்கிழமை பாலைவன பகுதியில் மேம்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர் (ALH) மூலம் செலுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இந்த ஏவுகணைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏவுகணை திறன்களை குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வரம்பில் மதிப்பிடுவதற்காக ஐந்து விதமாக செலுத்தப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 


ஹெலினா மற்றும் துருவாஸ்திரா ஏவுகணைகள் மூன்றாம் தலைமுறை, லாக் ஆன் பிஃபோர் லாஞ்ச் (Lock on Before Launch -LOBL)  என்ற முறையில்  இலக்குகளை தாங்க கூடிய டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகளாகும். இந்த  ஏவுகணை அமைப்பு அனைத்து வானிலைகளிலும் செயல்படும் என்பதோடு, பகல் மற்றும் இரவு நேரத்திலும் பயன்படுத்தக் கூடியது. இது உலகின் மிக மேம்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்களில் ஒன்றாகும். இப்போது, ​​ஏவுகணை அமைப்புகள் ராணுவதில் இணைய தயாராக உள்ளன.



பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath SIngh) இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள டிஆர்டிஓ, ராணுவம் மற்றும் விமானப்படைக்கு வாழ்த்து தெரிவித்தார். பாதுகாப்பு சோதனையின் ஆராய்ச்சி மற்றும் மேபாட்டு அமைப்பின் செயலாளர் மற்றும் டிஆர்டிஓ தலைவர் டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி வெற்றிகரமான சோதனை நடத்திய அணிகளின் முயற்சிகளை பாராட்டினர்.


ALSO READ | தற்சார்பு பாரதம்: கூகுள் மேப், கூகுள் எர்த் சேவைக்கு போட்டியாக ISRO-MapmyIndia


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR