எல்லையில் இருந்து பின்வாங்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது சீனா, கடந்த ஆண்டு பங்கோங் த்சோவில் பிங்கர் 5, பிங்கர் 6, பிங்கர் 7, மற்றும் பிங்கர் 8 பகுதிகளில் அமைத்திருந்த இராணுவ பதுங்கு குழிகளையும் கூடாரங்களையும் அகற்றத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
செயற்கைக்கோள் படங்கள், கண்காணிப்பு கருவிகள் நெட்வொர்க் கருவிகளை ஆகியவற்றின் உதவியுடன் சீன (China) படையின் ஒவ்வொரு அசைவையும் இந்தியா தீவிரமாக கவனித்து வருகிறது.
ஃபிங்கர் 5 இல் உள்ள ஹெலிபேட்டை சீன படை அகற்றி விட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. தவிர, பிங்கர் 6, பிங்கர் 7, மற்றும் பிங்கர் 8 ஆகிய இடங்களில் சாலை கட்டுமானமும் அகற்றப்பட்டுள்ளன.
பீரங்கிகளை தாக்கும் ஏவுகணை, ராடார் அமைப்புகள் மற்றும் பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுத அமைப்பையும் சீன இராணுவம் அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.
பிங்கர்5-6 பகுதியில் மாண்டரின் மொழி எழுதப்பட்ட கொடியும் அகற்றப்பட்டுள்ளது. முழுமையாக பின் வாங்கும் செயல்முறை தீவிரமடைந்துள்ளதாகவும், அடுத்த 10-15 நாட்களுக்குள் இது நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
கிழக்கு லடாக்கில் ஒன்பது மாதங்களுக்கும் மேலாக இந்திய மற்றும் சீனா இடையில் பதற்றம் நிலவி வந்தது. கடந்த வாரம், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தென் கரைகளில் இருந்து துருப்புக்களை வெளியேற்றுவது தொடர்பாக பரஸ்பர ஒப்பந்தம் குறித்து அறிவித்திருந்தார். மேலும் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுத்தரவில்லை என்பதையும் அமைச்சர் உறுதிசெய்தார், கிழக்கு லடாக்கில் எல்.ஐ.சி உடன் வேறு சில இடங்களில் படைகளை நிறுத்துவது மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை தொடர்பாக சில தீர்க்கபடாத விஷயங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
ALSO READ | மியான்மார் ராணுவத்தின் ஒடுக்குதலையும் மீறி தீவிரமடைகிறது மக்கள் போராட்டம்