உடலில் உள்ள கொரோனா ஆண்டிபாடிகளை கண்டறியும் கருவியை தயாரித்துள்ளது DRDO
புதுடெல்லியை சேர்ந்த வான்கார்டு டயக்னோஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் (Vanguard Diagnostics Pvt Ltd )எனும் நிறுவனத்துடன் இணைந்து DIPCOVAN கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) ஆய்வகமான உடலியல் மற்றும் சார்பு அறிவியலுக்கான பாதுகாப்பு நிறுவனம், டிப்கோவான் (DIPCOVAN) என்ற உடலில் உள்ள ஆண்டிபாடிகளை கண்டறியும் கருவியை உருவாக்கியுள்ளது.
சார்ஸ்-கோவி-2 (SARS COV-2 ) வைரஸ் ஆண்டி பாடிகள் உள்ளது என்பதை 99 சதவீதம் துல்லியத்துடன் இந்த டிப்கோவேன் என்னும் கருவியால் கண்டறிய முடியும். அதுவும் 75 நிமிடங்களில், சோதனை முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இந்த பரிசோதனை கிட்டை சுமார் 18 மாதங்களுக்கு பயன்படுத்தலாம்.
புதுடெல்லியை சேர்ந்த வான்கார்டு டயக்னோஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் (Vanguard Diagnostics Pvt Ltd )எனும் நிறுவனத்துடன் இணைந்து DIPCOVAN கருவி உருவாக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த கருவி, தில்லி கோவிட் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளிகளின் மாதிரிகளைக் கொண்டு, கடந்த ஒரு வருடமாக விரிவாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. 2021 ஏப்ரல் மாதத்தில் இதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு (ICMR) ஒப்புதல் அளித்தது.
ALSO READ | COVID-19: கருப்பு பூஞ்சையை அடுத்து பீதியை கிளப்பும் வெள்ளை பூஞ்சை
2021 மே மாதம், இக்கருவியின் தயாரிப்பு, விற்பனை மற்றும் விநியோகத்திற்கு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI), மத்திய மருந்துகள் தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
2021 ஜூன் மாதத்தில் வர்த்தக ரீதியாக அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த கருவி மூலம் செய்யப்படும் பரிசோதனைக்கு சுமார் ரூபாய் 75 செலவாகும் என்று கூறப்படுகிறது.
COVID-19 பெருந்தொற்றுவியல் மற்றும் ஒரு தனி நபருக்கு ஏற்பட்டுள்ள SARS COV-2 பாதிப்பு அளவை புரிந்துகொள்ள இக்கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ | சமூக ஊடகங்களில் ‘இந்திய திரிபு’ என குறிப்பிடும் பதிவுகளை நீக்க வேண்டும்: மத்திய அரசு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR