‘சிங்கப்பூர் திரிபு’ வைரஸ் சர்ச்சை கருத்தால் சிக்கலில் சிக்குகிறாரா கெஜ்ரிவால்

கொரோனா திரிபு குறித்த ஆதாரம் எதுவும் இல்லாமல், பொறுப்பற்ற முறையில், பேசி இருப்பதாக சிங்கப்பூர் குற்றம் சாட்டியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 20, 2021, 07:09 AM IST
  • இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் விமான சேவை எதுவும் இல்லை.
  • வைரஸ் பரவலை தடுக்க, சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கான விமான சேவைக்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் கோரிக்கை விடுத்தார்.
  • வந்தே பாரத் மிஷனின் கீழ் இரு விமானங்கள் இயக்குகின்றன
‘சிங்கப்பூர் திரிபு’ வைரஸ் சர்ச்சை கருத்தால் சிக்கலில் சிக்குகிறாரா கெஜ்ரிவால் title=

சிங்கப்பூரில் புதிய திரிபு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என்றும், வைரஸ் பெரும்பாலான நாடுகளில் மூன்றாவது அலையை ஏற்படுத்தக் கூடும் எனவும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த அரவிந்த் கெஹ்ரிவால், அதனால், இந்தியா சிங்கபூருக்கான சேவையை நிறுத்த வேண்டும் என கூறினார். 

மேலும் இந்த வைரஸ் பரவலை தடுக்க, சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கான விமான சேவைக்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் கோரிக்கை விடுத்தார் . 

இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு கடுமையாக கண்டனங்களை பதிவு செய்துள்ள சிங்கப்பூர்,  கொரோனா திரிபு குறித்த ஆதாரம் எதுவும் இல்லாமல், பொறுப்பற்ற முறையில், பேசி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் விமான சேவை எதுவும் இல்லை, வந்தே பாரத் மிஷனின் கீழ் இரு விமானங்கள் இயக்குகின்றன என இந்திய சிவில் போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர் இந்திய தூதரை அழைத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் "சிங்கப்பூர் திரிபுகுறித்த ட்வீட்டிற்கு தனது "வலுவான ஆட்சேபனை" தெரிவித்தது.

மேலும், "சிங்கப்பூரில், ஆன்லைன் போலி செய்திகள் மற்றும் தகவல்ளை கட்டுப்படுத்தும் சட்டமான (Protection from Online Falsehoods and Manipulation Act) POFMA சட்டத்தின் கீழ், தில்லி முதல்வர் அர்விந்த் கேஜரிவால், நடவடிக்கை எடுக்க இருந்ததாக, சிங்கப்பூர் உயர் தூதர் சைமன் வோங் செய்தி நிறுவனமான பி.டி.ஐயிடம் கூறினார். 

ALSO READ | பில் கேட்ஸ்- மெலிண்டா இடையிலான பிளவிற்கு காரணம் ’Jeffrey Epstein’ என்பது உண்மையா

 

இதை தொடர்ந்து, வெளியிறவு அமைச்சர் ஜெய்சங்கர் "கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூரும் இந்தியாவும் இணைந்து போராடி வருவதோடு, ஆக்ஸிஜன் சப்ளை அளித்து உதவும் சிங்கப்பூருக்கு பாராட்டுங்கள். கொரோனா திரிபு அல்லது விமான போக்குவரத்து கொள்கை பற்றி பேசுவதற்கு, எந்த வித அதிகாரமும் கேஜ்ரிவாலுக்கு இல்லை. இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால உறவை சேதப்படுத்தும் வகையில் பேசியுள்ள அர்விந்த் கேஜரிவாலின் பேச்சு, இந்தியாவின் குரல் அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறேன், "என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.

திரு ஜெய்சங்கரின் ட்வீட்டுக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் பதிலளித்தார்: "நன்றி  திரு.எஸ்.ஜெய்சங்கர், நம் நாடுகளின் நிலைமையை சீர் செய்வதிலும், பரஸ்பரம் உதவுவதிலும் கவனம் செலுத்துவோம். எல்லோரும் பாதுகாப்பாக இருக்கும் வரை யாரும் பாதுகாப்பாக இல்லை." என தெரிவித்தார்

ALSO READ | இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்; பொதுவான நிலைபாட்டை எடுக்க முடியாமல் திணரும் ஐரோப்பிய யூனியன்
 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News