இந்திய அரசு 54 சீன செயலிகளை விரைவில் தடை செய்யப் உள்ளதாக ANI செய்தி நிறுவனம் ஒரு ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது. இந்த செயலிகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறது என அரசு கருதுவதாகவும், எனவே இவற்றை தடை செய்வதற்கான உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சீன செயலிகளில் அலிபாபா,  Viva Video Editor,  AppLock மற்றும் Garena Free Fire போன்ற பல பிரபலமான செயலிகள் அடங்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் இறுக்கமான சூழ்நிலை நிலவி வரும் இந்த நேரத்தில், இந்த 54 சீன பயன்பாடுகள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்பதால், அவற்றைத் தடை செய்வது அவசியம் என்று அரசாங்கம் நம்புகிறது.


தடை செய்யப்படும் செயலிகள்


தற்போது அரசாங்கம் தடை செய்ய உள்ள செயலிகள் பெயர்களின் முழுமையான பட்டியல் வெளியிடப்படவில்லை.  எனினும் பட்டியலில்,  அலிபாபா, பியூட்டி கேமரா: ஸ்வீட் செல்ஃபி எச்டி, பியூட்டி கேமரா, செல்ஃபி கேமரா, ஈக்வலைசர் & பேஸ். பூஸ்டர், கேம்கார்டு ஃபார் சேல்ஸ்ஃபோர்ஸ் ஆன்ட், ஐசோலண்ட் 2: ஆஷஸ் ஆஃப் டைம் லைட், விவா வீடியோ எடிட்டர், டென்சென்ட் எக்ஸ்ரிவர், ஆப்லாக் மற்றும் டூயல் ஸ்பேஸ் லைட் (Sweet Selfie HD, Beauty Camera, Selfie Camera, Equalizer & Base Booster, Camcard for Salesforce, Isoland 2: Ashes of Time Lite, Viva Video Editor, Tencent XRiver, AppLock and Dual Space Lite) ஆகியவை உள்ளன.


சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்வது முதல் முறை இல்லை. கடந்த ஆண்டும், PUBG, Tiktok மற்றும் Cam Scanner போன்ற பல செயலிகளை அரசாங்கம் தடை செய்தது.