வம்சா வழியாக வந்த ஆதிக்கம் ராகுலுக்கு கட்சி தலைமை பொருப்பை அளித்திருக்கலாம், ஆனால் அதற்கான ஞானம் மற்றும் தோற்றத்தை அவர் இன்னும் பெறவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபடும் தலைவர்கள் மற்ற தலைவர்களை சாடுவதும், புகழ்வதும் வழக்கமான ஒன்று. அந்த வகையில் இன்று இந்தூர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட நரேந்திர மோடி அவர்கள் ராகுல் காந்தியின் கட்சி தலைமை பொருப்பை குறிவைத்து பரப்புரை மேற்கொண்டார்.


பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியினரை கடுமையாக சாடிய மோடி அவர்கள்., கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை உள்ள மக்கள் ஆளும் பாஜக ஆட்சி மீண்டும் வரவேண்டும் என விரும்புகின்றனர் எனவும் பேசினார். 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தேசிய முற்போக்கு கூட்டணியின் மீது மக்கள் காட்டிய வெறுப்புணர்வு தற்போது தொடர்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.


1984-ஆம் ஆண்டு நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக நடைப்பெற்ற வன்முறை வெறியாட்டங்களை ‘நடந்தது, நடந்து விட்டது’ என்று கூறுவதன் மூலம் காங்கிரஸ் கட்சி தனது நிஜமுகத்தை வெளிப்படுத்தி விட்டது.


இதே ‘நடந்தது, நடந்து விட்டது’ மனப்பான்மையில்தான் இதே மாநிலத்தில் முன்னர் நடந்த போபால் விஷவாயு தாக்குதலுக்கு காரணமான குற்றவாளி (வார்ரன் ஆண்டர்சன்) தப்பியோடவும் காங்கிரசார் துணை புரிந்துள்ளனர் என கடுமையாக சாடினார்.


மேலும் இந்து மதத்தின் பாரம்பரியத்தை இழிவுப்படுத்துவதற்காக ‘இந்து பயங்கரவாதம்’ என்ற சதி திட்டத்தை காங்கிரஸ் அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. ஓட்டுவங்கி அரசியல் என்னும் அடிப்படையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.


காங்கிரஸ் கட்சியினரும் அவர்களுடன் இணைந்திருக்கும் மெகா கூட்டணிகளும் எத்தனை பூணூல்களை காட்டினாலும் இந்து மதத்தின் நிறமான காவியில் பயங்கரவாத கரையை படியவிட்ட பாவத்தில் இருந்து அவர்கள் ஒருநாளும் தப்பிக்கவே முடியாது’ என இந்த கூட்டத்தில் பேசிய மோடி குறிப்பிட்டார்.



தொடர்ந்து பேசிய அவர்., தூய்மை இந்தியா திட்டத்திற்கு பெரிதும் உதவிய மத்திய பிரதேச மக்கள், குறிப்பாக இந்தூர் மக்களுக்கு நன்றி தெரிவிக்க கடமை பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.