இந்தியா முழுவதும் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் புள்ளி விவரங்கள் அடங்கிய புதிய போர்ட்டலை மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்தது. கட்டுமான தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தெருவோர விற்பனையாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சமூக நலத்திட்டங்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அவர்களுக்கு நேரடியாகச் சென்று சேர்க்கும் நோக்கில் இந்த e-SHRAM போர்டல் தொடங்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இ-ஷ்ராம் (e-SHRAM) போர்ட்டலில் விண்ணப்பிக்க, தொழில்லாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு, தொழிற்சங்கங்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ராமேஸ்வர் தெலி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த போர்ட்டலில் சுமார் ஒரு கோடி தொழிலாளர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர். இதி பதிவு செய்தவர்களுக்கு இ-ஷ்ராம் கார்டு வழங்கப்பட்டு, COVID -19 நிவாரணத் திட்டம், அடல் காப்பீட்டு  திட்டம் உள்ளிட்ட பல நல திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்


மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், அமைப்புசாரா துறையில் உள்ள சுமார் 38 கோடி தொழிலாளர்களுக்காக 12 இலக்க யுனிவர்ஸல் அக்கவுண்ட் நம்பர் (UAN) மற்றும் இ-ஷ்ராம் கார்டை வழங்கும், இது நாடு முழுவதும் செல்லுபடியாகும். இ-ஷ்ராம் கார்டு நாட்டின் கோடிக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஒரு புதிய அடையாளத்தைக் கொடுக்கும். 


ALSO READ | பென்ஷன் இல்லை என டென்ஷன் எதற்கு; ₹10,000 ஓய்வூதியம் தரும் அசத்தல் திட்டம்


அரசாங்கத்தின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, இப்போது அமைப்புசாரா துறையின் தொழிலாளர்களுக்கான, மத்திய அரசின் நல திட்டங்களான பிரதம மந்திரி ஷ்ராம் யோகி மந்தன் யோஜனா (PMSYM), பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) மற்றும் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) ஆகியவற்றின் நன்மைகளைப் பெற முடியும். .


PMSYM, PMJJBY, PMSBY மற்றும் PM-JAY (ஆயுஷ்மான் பாரத்) உள்ளிட்ட சமூக பாதுகாப்பு (ஓய்வூதியம், காப்பீடு) திட்டங்கள் தரவுத்தளத்தில் சேர்க்கப்படும் என்று தொழிலாளர் நல இயக்குனர் மற்றும் அமைச்சகத்தின் இணை செயலாளர் அஜய் திவாரி கூறினார். 


அமைப்பு சாரா துறையின் தொழிலாளர்கள் 14434 என்ற தேசிய கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டால், அமைப்பு சாரா தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்


5 லட்சம் இலவச சுகாதார காப்பீடு


ஆயுஷ்மான் பாரத் யோஜனா (பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா) கீழ், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ரூ .5 லட்சம் இலவச சுகாதார காப்பீடு வழங்கப்படுகிறது.


PMSYM திட்டத்தின் கீழ் ரூ.3000 ஓய்வூதியம் 


பிரதம மந்திரி ஷ்ராம் யோகி மன் தன் யோஜனா என்பது அமைப்புசாரா துறையின் தொழிலாளர்களுக்கு ஒரு சிறந்த திட்டமாகும். இதன் கீழ், தெரு விற்பனையாளர்கள், ரிக்ஷாக்காரர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாராத் துறையுடன் தொடர்புடைய வேறு துறையை சேர்ந்தவர்களுக்கு, மாதத்திற்கு ரூ.3000 அதாவது ஆண்டுக்கு ரூ .36000 ஓய்வூதியம் கிடைக்கும்.


ALSO READ | Old is Gold: இந்த ‘25’ பைசா உங்களிடம் இருந்தால், ₹1.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR