புதுடெல்லி: சீனாவைச் சேர்ந்த சார்லி பெங் (Charlie Peng) என்று அழைக்கப்படும் லுயோ சாங் (Luo Sang) மற்றும் அவருடன் தொடர்புடைய 1000 கோடி ரூபாய் ஹவாலா வழக்கில் அமலாக்க இயக்குநரகம் (ED) பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act (PMLA)) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி டெல்லி போலீஸ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ததன் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பணமோசடி மற்றும் ஹவாலா தொடர்பு தொடர்பான வருமான வரித் துறையின் விசாரணையில் Luo மீதான சந்தேகங்கள் வலுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  


தலாய் லாமாவை உளவு பார்த்ததான சந்தேகத்தின் பேரில் டெல்லியின் மஜ்னு கா டீலா பகுதியில் இருந்து Luo கைது செய்யப்பட்டார், ஆனால் பின்னர் மோசடி மற்றும் பாஸ்போர்ட் சட்டத்தின் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.


குவாஹாட்டி பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து மணிப்பூர் முகவரியில் வழங்கப்பட்ட ஒரு போலி பாஸ்போர்ட்டை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதோடு, அவர் மீது 2019 ஜூன் 6ஆம் தேதியன்று போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர், ஆனால் குற்றச்சாட்டுகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.


முன்னதாக 2020 ஆகஸ்ட் 11 அன்று, சார்லி பெங் மற்றும் வங்கியாளர்கள் மற்றும் சி.ஏ உள்ளிட்ட சில குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வருமான வரி சோதனைகள் தொடங்கின. அதோடு, 1000 கோடி ரூபாய் ஹவாலா மற்றும் பணமோசடி நடந்திருப்பதை அந்த சோதனைகளும் விசாரணைகளும் உறுதிபடுத்தின.


சார்லி பெங் மற்றும் வேறு சில சீனர்கள், வங்கி அதிகாரிகள் மற்றும் சி.ஏ. உதவியுடன் 40 வங்கிக் கணக்குகளைத் திறந்து ஷெல் நிறுவனங்களை இயக்கி வருவதாக வருமான வரித்துறை ளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  


அவர்கள் போலி நிறுவனங்களிடமிருந்து 100 கோடியை திரும்பப் பெற்று இந்தியாவில் Retail Chain Showroomகளை அமைத்தார்கள்.


Read Also | இந்தியாவின் கோவிட் -19 ஆய்வு பரிசோதனைகளில் பூடான் இணைய ஆர்வம் காட்டும் ரகசியம் என்ன?