கடந்த ஜூன் மாதம் ஐசிசி ஆடவர் டி20 உலக கோப்பை போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு டி20 கோப்பையை ரோஹித் சர்மா தலைமையில் வென்றது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் Magwin என்ற பெட்டிங் இணையதளம் மூலம் உலக கோப்பை போட்டிகளை முறையான அனுமதியின்றி ஸ்ட்ரீமிங் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் அதிக அளவு பண மோசடியும் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை குற்றசாட்டுகளை வைத்துள்ளது. இந்நிலையில் இந்த கும்பலை கண்டுபிடிக்க அமலாக்க துறை குஜராத் காவல்துறையுடன் இணைந்து திங்கள்கிழமை முதல் பல மாநிலங்களில் விசாரணை மற்றும் சோதனை நடத்தி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கொல்கத்தாவை அடுத்து உத்தரகாண்டில்... வன்கொடுமைக்கு ஆளான செவிலியர் - தவிக்கும் 11 வயது மகள்


டெல்லியின் மைய பகுதி, கர்நாடகாவில் பெங்களூரு, உத்தர பிரதேசத்தில் லக்னோ, தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர் போன்ற இடங்களில் அமலாக்க துறை அதிகாரிகள் மற்றும் அகமதாபாத் சைபர் போலீசார் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். magicwin.games என்ற இணையதளம் வழியாக டி20 உலக கோப்பை போட்டிகளை முறையான அங்கீகாரமின்றி சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்ததாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அகமதாபாத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. போட்டிகளை அனுமதியின்றி ஹோஸ்ட் மற்றும் ஸ்ட்ரீம் செய்ததற்காக குற்றவாளிகளை தேடி, கைது செய்து வருகின்றனர்.


ஐசிசி நடத்தும் டி20 உலக கோப்பை போட்டிக்கான ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பெற்றுள்ளது. "magicwin என்ற இணையதளம் மூலம் ஸ்மார்ட் போன்கள், டிவி, லேப்டாப் ஆகியவற்றில் இலவசமாக போட்டிகளை பார்க்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்தி பார்க்க வேண்டிய போட்டியை இதன் மூலம் இலவசமாக பார்க்க முடியும். இந்த இணையதளம் மூலம் சட்டவிரோதமாக ஜூன் 7ம் தேதி நடைபெற்ற கனடா மற்றும் அயர்லாந்து இடையேயான போட்டி, ஜூன் 9ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான டி20 உலக கோப்பை போட்டிகளை ஒளிபரப்பி உள்ளனர். இதன் காரணமாக Disney+Hotstar தளத்திற்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது" என்று ED தெரிவித்துள்ளது.


உலக கோப்பை போட்டிகளை ஒளிபரப்பியது மட்டும் இன்றி கிரிக்கெட் போட்டிகள் மற்றும் மற்ற விளையாட்டுகளில் சூதாட்டம் போன்ற சட்டவிரோத செயல்களில் இந்த இணையதளம் ஈடுபட்டுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த இணையதளம் மூலம் கிரிக்கெட் போட்டிகளை பார்த்தவர்கள், இந்த பெட்டிங் கேமில் விளையாடி பணத்தைம் இழந்துள்ளனர். நேற்று அதிரடியாக நடைபெற்ற இந்த சோதனையில் குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்ட டிஜிட்டல் சாதனங்கள், 30 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் ரூ.2 கோடி முடக்கப்பட்டு, ரூ.12 கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட்டு இருந்த கிரிப்டோ வாலட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: தீவிரமடையும் மருத்துவர்களின் பணி புறக்கணிப்பு போராட்டம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ