சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உக்ரைன் போர் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கச்சா எண்ணெய் முதல், சமையல் எண்ணெய் வரை  பலவற்றின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 


இந்நிலையில் பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், சில நாட்களுக்கு முன்பு, மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைத்தது. பெட்ரோல் விலையில் 9.50 ரூபாயும், டீசல் விலையில் 7 ரூபாயும்  குறைந்தது. அதேபோல, எஃகு மற்றும் பிளாஸ்டிக் தொழிலில் பயன்படுத்தப்படும் சில மூலப்பொருட்களின் இறக்குமதி வரியையும் மத்திய அரசு குறைக்கும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.


மேலும் படிக்க | IOCL M15 Petrol: இந்தியன் ஆயிலின் மெத்தனால் கலந்த மலிவு விலை பெட்ரோல்


இந்நிலையில், தற்போது சமையல் எண்ணெய் விலைகளை கட்டுப்படுத்தவும் அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது. உலகில் சூரிய காந்தி உற்பத்தியில் முதன்மை இடத்தில் உக்ரைன் உள்ள நிலையில், ரஷ்யா உக்ரைந் போர் காரணமாக அங்கிருந்து வரும் சூரிய காந்தி குறைந்துள்ளதால் சூரிய காந்தி எண்ணெய் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.


எனவே, எண்ணெய் மீதான இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்படும் என மத்தியப் அரசு அறிவித்துள்ளது. சோயாபீன் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள முக்கிய முடிவில், 2024 மார்ச் வரை ஆண்டுதோறும் 2 மில்லியன் டன் கச்சா சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி மீதான சுங்க வரி மற்றும் விவசாய உள்கட்டமைப்பு மேம்ப்பாட்டு வரியை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு பிறகு, சமையல் எண்ணெய் விலை குறையும்.


செவ்வாய்க்கிழமை நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், 2022-23 மற்றும் 2023-24 நிதியாண்டுகளில் ஆண்டுதோறும் 20 லட்சம் டன் கச்சா சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்க்கு சுங்க வரி விதிக்கப்படாது. இறக்குமதி வரியில் அளிக்கப்பட்ட இந்த விலக்கு உள்நாட்டு விலையை குறைக்கும் மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவும். 


அரசாங்கம் எடுத்த முடிவின்படி, மார்ச் 31, 2024 வரை மொத்தம் 8 மில்லியன் டன் கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை வரியின்றி இறக்குமதி செய்யலாம். இது உள்நாட்டில் விலையை குறைக்க உதவும்.


மேலும் படிக்க | பெட்ரோல் டீசல் விலை குறையுமா; நிதி அமைச்சர் கூறுவது என்ன..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR