மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார்!
Maharashtra New CM: மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக (BJP) மற்றும் ஏக்நாத் ஷிண்டே (Eknath Shinde) அணி இணைந்து ஆட்சி அமைக்க தயாராகி வருகிறது.
Maharashtra New CM Eknath Shinde: மகாராஷ்டிராவில் அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள். மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக சிவசேனா ஏக்நாத் ஷிண்டே தான் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக பதவியேற்பார் என தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார். இதன்மூலம் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தான் என்பது தெளிவாகியுள்ளது.
இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தேவேந்திர ஃபட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்கள் கலந்துக்கொண்டார். மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், ஷிண்ட் அரசுக்கு முழு ஆதரவை வழங்குவோம். பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையை அரசு முன்னெடுத்துச் செல்லும்.
காங்கிரஸ் மற்றும் என்சிபி உடனான கூட்டணியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சிவசேனா எம்எல்ஏக்கள் கோரி வந்தனர். ஆனால் உத்தவ் தாக்கரே இந்த எம்எல்ஏக்களை புறக்கணித்து, எம்விஏ கூட்டணி கட்சிகளுக்கு முன்னுரிமை அளித்தார். அதனால்தான் இந்த எம்எல்ஏக்கள் தங்கள் குரலை தீவிரப்படுத்தினர் என தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறினார்.
மேலும் படிக்க: மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ராஜினாமா
இந்துத்துவா மற்றும் சாவர்க்கருக்கு எதிரானவர்களுடன் சிவசேனா கூட்டணி அமைத்தது. மக்களின் ஆணையை சிவசேனா அவமதித்தது. 2019-ம் ஆண்டு பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டதால், ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையை நாங்கள் பெற்றோம் என்றார். நாங்கள் மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்போம் என்று நம்பினோம். ஆனால் பாலாசாஹேப் வாழ்நாள் முழுவதும் யாருக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தாரோ அவர்களுடன் கூட்டணி அமைக்க சிவசேனா தேர்வு செய்தது என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறினார்.
அதன் பிறகு பேசிய ஏக்நாத் ஷிண்டே, நாங்கள் எடுத்த முடிவு, பாலாசாகேப்பின் இந்துத்துவா மற்றும் எங்கள் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளின் வளர்ச்சிப் பணிகளுக்கானது. எங்களுடன் 50 எம்எல்ஏக்கள் உள்ளனர். மேலும் அடுத்த தேர்தல்களில் வெற்றி பெறுவது கடினம் என்பதை உணர்ந்ததால், முன்னாள் முதல்வர் தாக்கரேவிடம் எங்கள் தொகுதியின் குறைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பேச சென்றோம் மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தலாம் என நாங்கள் கோரிக்கை வைத்தோம் என்றார்.
மேலும் படிக்க: முடிவுக்கு வந்த மகாராஷ்டிர அரசியல் நெருக்கடி
சிவசேனாவை சேர்ந்த 40 எம்.எல்.ஏக்கள் உட்பட மொத்தம் 50 எம்.எல்.ஏக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். அவர்களது உதவியால் இதுவரை இந்த போரில் ஈடுபட்டுள்ளோம். இந்த 50 பேரும் என் மீது வைத்த நம்பிக்கையை ஒரு துளி கூட சிதைக்க விடமாட்டேன் என மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்கும் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR